YouTurn

திமுக எம்.பி செந்தில் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

திமுக எம்.பி செந்தில் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுக'விட்டு வெளியேறும் செந்தில்குமார் எம்.பி.! கூட்டணி கட்சிகள் என்பதற்க்காக ஹிந்தி ஆதிக்கத்திற்கு துணை போகமுடியாது! கொள்கையை விட்டுவிட்டு திமுகவில் பயணிக்க விருப்பமில்லை. 

X link | Archive link 

விரிவான விளக்கம்

சமீபத்தில் (டிச. 19) ‘இந்தியா’ (INDIA - Indian National Developmental Inclusive Alliance) கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் இந்தியில் பேசியுள்ளார். அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு கேட்டதாகவும் அதற்கு, இந்தி தேசிய மொழி. அனைவரும் கற்க வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறியதாகவும் ஒரு தகவல் ஊடகங்களில் வெளியானது. ஆனால், இது தொடர்பாக டி.ஆர்.பாலுவோ நிதிஷ் குமாரோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதேபோல் திமுகவைச் சேர்ந்த எம்.பி செந்தில் குமார் டிசம்பர் 5ம் தேதி  நாடாளுமன்றத்தில் பேசுகையில், பாஜக இந்தியை மையமாகக் கொண்ட மாநிலங்களில் மட்டுமே தேர்தலில் வெற்றி பெரும். அவற்றை பொதுவாக நாங்கள் கோமூத்திரா மாநிலங்கள் என அழைப்போம். தென் மாநிலங்களில் உங்களால் (பாஜக) வர முடியாது எனக் கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு பேசியதற்கு வெளிப்படையாக செந்தில் குமார் மன்னிப்பும் கேட்டார்.



இந்நிலையில் கூட்டணிக் கட்சிகள் என்பதற்காக இந்தி ஆதிக்கத்திற்கு துணை போகமுடியாது எனக் கூறி செந்தில் குமார் திமுகவில் இருந்து விலகியுள்ளார் என புதிய தலைமுறை பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.



Archive link 

உண்மை என்ன ?

பரவக் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ‘26.12.2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் ஆய்வு செய்தோம். அப்படி அந்த நியூஸ் கார்டையும் அவர்கள்  வெளியிடவில்லை. 

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என அவரது X (எக்ஸ்) பக்கத்தில் தேடினோம். அவ்வாறு எந்தவித கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. 

மேலும் எந்த ஊடகத்திலும் அவர் அப்படி கூறியதாக செய்தி வெளியாகவில்லை. இதுகுறித்து, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், அது தங்கள் ஊடகத்தின் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு என்பதை தெரிவித்தனர்.



இவற்றில் இருந்து இது போலியாக எடிட் செய்யப்பட நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது புதிய தலைமுறை பெயரில் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க