YouTurn

திமுக எம்பிக்கள் குரூப் போட்டோவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் என சவுக்கு சங்கர் பரப்பும் பொய் !

திமுக எம்பிக்கள் குரூப் போட்டோவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் என சவுக்கு சங்கர் பரப்பும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுக எம்பிக்கள் க்ரூப் போட்டோவில் ரவீந்திரநாத்.


விரிவான விளக்கம்

திமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் இடையேயான அதிகார மோதல் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வரும் சவுக்கு சங்கர், அதிமுகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான(மக்களவை) ஓ.பி.ரவீந்திரநாத் குமார் திமுக எம்.பிக்கள் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவில் இடம்பெற்று உள்ளதாக இப்புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.





உண்மை என்ன ? 

சவுக்கு சங்கர் பதிவிட்ட புகைப்படத்தில் எம்.பிக்களுக்கு நடுவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அமர்ந்து இருக்கிறார். அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 மார்ச் 24ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவில் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.



Twitter link | Archive link

அப்பதிவில், " டெல்லி, கோவா, ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ராஷ்டிரபதி பவனின் கலாச்சார மையத்தில் காலை உணவு விருந்து அளித்ததாக " இடம்பெற்று இருக்கிறது.



Twitter link | Archive link

மார்ச் 24ம் தேதி அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் ட்விட்டர் பக்கத்தில், " மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு ஜி அவர்கள் அழைப்பினை ஏற்று ராஷ்டிரபதி பவனில் இன்று காலை உணவு விருந்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டேன் " எனப் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link

இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் திமுக, அதிமுக மட்டுமின்றி பாஜகவைச் சேர்ந்த எம்.பிக்களும் இடம்பெற்று உள்ளனர். கோவாவைச் சேர்ந்த பாஜகவின் ராஜ்யசபா எம்.பியான வினய் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதே புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க : சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !

மேலும் படிக்க : தமிழ்நாடு ஆளுநர் அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றதாக சவுக்கு சங்கர் பரப்பும் பொய் !

இதற்கு முன்பாக, சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளின் தொகுப்பு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், திமுக எம்.பிக்களின் குரூப் போட்டோவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் இருப்பதாக சவுக்கு சங்கர் பரப்பிய தகவல் தவறானது. டெல்லி, கோவா, ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த எம்பிக்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளித்த விருந்தின் போது இப்புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க