YouTurn

திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து திமுகவினரே போராட்டம் நடத்துவதாக பரவும் 2020ம் ஆண்டு செய்தி!

திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து திமுகவினரே போராட்டம் நடத்துவதாக பரவும் 2020ம் ஆண்டு செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுக ஆட்சியில் டாஸ்மாக்கை எதிர்த்து திமுக எம்எல்ஏவே போராட்டம் நடத்துவது “உலக மகா நடிப்புடா சாமி”



 

X Link

விரிவான விளக்கம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 57ஆக உயர்ந்துள்ளது.  இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், திமுக ஆட்சியில் டாஸ்மாக்கை எதிர்த்து திமுக எம்.எல்.ஏவே போராட்டம் நடத்துவது "உலக மகா நடிப்புடா சாமி" என்று பதிவிட்டு தினத்தந்தி செய்தியின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை பாஜகவின் செல்வக்குமார் என்பவர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்.

உண்மை என்ன ?

பரவக்கூடிய தினத்தந்தி செய்தியின் ஸ்கீரின்ஷாட் கொண்டு தேடியதில், இது தற்போது வெளியான செய்தி அல்ல என்றும் 2020ஆம் ஆண்டு வெளியான செய்தி என்பதையும் அறியமுடிந்தது. பரவக்கூடிய செய்தித்தாளில் ‘தினத்தந்தி’ என்றுள்ளது. ஆனால், எந்த தேதியில் வெளியான செய்தி என அதில் குறிப்பிடப்படவில்லை.  எனவே அத்தலைப்பினை கொண்டு தேடியதில்,  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் தினத்தந்தியில் 2020 மே மாதம் 8ஆம் தேதி செய்தி வெளியிட்டு இருப்பதைப் பார்க்கமுடிகிறது. பரவிவரும் ஸ்க்ரீன்ஷாட்டில் இருக்கும் அதே செய்தி இருப்பதையும் உறுதிசெய்ய முடிந்தது. 

2020ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தது அதிமுக. அப்போது அதிமுக ஆட்சியில் , கள்ளக்குறிச்சியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். 

முடிவு :

நம் தேடலில், 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஈடுபட்டதை தற்போது நடந்ததுபோன்று பாஜகவினர் தவறாகப் பரப்பிவருகின்றனர் என்பது தெளிவாகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க