யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மேடையில் வைக்கப்பட்டிருந்த திரையில் அம்பேத்கரின் படமும் வாக்கியமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
நடப்பது சட்டத்துறை மாநாடு ஆனால் அந்த சட்டத்தை தந்த அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் இல்லை. ஏன் இந்த புறக்கணிப்பு?தலீத் என்பதாலா?

விரிவான விளக்கம்
கடந்த சனிக்கிழமை (ஜன.18) திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ரகுபதி, பொன்முடி, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திமுகவின் சட்டத்துறை மாநில மாநாடாம்...
ஒரு இடத்தில் கூட சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் படம் இல்லை! pic.twitter.com/ml9YnhYvwW
சட்டத்துறையின் மாநாட்டில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் புகைப்படம் இல்லை என சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்கள் நாம் தமிழர் மற்றும் தவெக கட்சியினரால் பரப்பப்படுகிறது.
சட்டத்துறை மாநாடு....😂🤣😂 சட்டத்தை இயற்றிய பாபாசாகேப் படம் எங்கே...😡😡???????
அன்று பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததாக அமித்ஷாவுக்கு எதிராக போலிப் போராட்டம்....!!!
இன்று பாபாசாகேப் அம்பேத்கர் புறக்கணிப்பு திராவிட மாடலின் சமத்துவம் இதுதான்!!!!!!!!!! pic.twitter.com/PikY3IthKN
உண்மை என்ன?
சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி விளையாட்டுத்திடலில் நடந்த திமுகவின் சட்டத்துறை மாநில மாநாடு நிகழ்ச்சி ‘IBC’ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டுள்ளது. அதில், அம்பேத்கரின் படமும் அவரது வாக்கியமும் இடம்பெற்றுள்ளதைக் காண முடிந்தது.
நிகழ்ச்சி மேடையின் பின்புலத்தில் அமைக்கப்பட்டு இருந்த Digital Screen-ல் பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் படங்களும் வாக்கியமும் மாறி மாறி வருவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்திரையில் அம்பேத்கரின் படம் வராத நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு, திமுக-வின் சட்டத்துறை மாநாட்டில் அம்பேத்கரின் படம் இல்லை எனத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
மேற்கண்ட ஆதாரத்திலிருந்து திமுக சட்டத்துறை மாநில மாநாட்டில் அம்பேத்கர் படம் பயன்படுத்தப்படவில்லை என்பது தவறான தகவல் என அறிய முடிகிறது.

மேலும் திமுக சார்பில் கலைஞர் ஆட்சி அதிகாரத்திலிருந்த போது தான் சென்னை சட்டக்கல்லூரிக்கு, 'டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
திமுக-வின் சட்டத்துறை மாநில மாநாட்டில் அம்பேத்கரின் புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை என்பது தவறான தகவல். அம்பேத்கரின் படமும் வாக்கியமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.