YouTurn

கர்நாடகா பாடப் புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் கிழிக்கப்படும் எனப் பரவும் டி.கே.சிவகுமாரின் பழைய வீடியோ..!

கர்நாடகா பாடப் புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் கிழிக்கப்படும் எனப் பரவும் டி.கே.சிவகுமாரின் பழைய வீடியோ..!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

கர்நாடகாவில் பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும்.. இன்னும் பதவியே ஏற்கவில்லை அதற்குள் சரவெடி.. 

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பதவியேற்பதற்கு முன்பே கர்நாடக பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும் என்று கூறி கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) தலைவரான டி.கே.சிவக்குமார் மேடையில் பாடப் புத்தகத்தைக் கிழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



 Archive Link:




உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2022 ஜூன் 18 அன்று எகனாமிக் டைம்ஸ் செய்தியில் இந்த வீடியோ குறித்த செய்தி வெளியிட்டுள்ளது. அதில் திருத்தப்பட்ட கர்நாடக பாட புத்தகங்களை திரும்ப பெற வேண்டும் எனக் கூறி கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரான டி கே சிவக்குமார் கர்நாடக பாட புத்தகங்களை கிழிப்பதாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது.



இது குறித்த செய்திகளை தேடியதில், டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம், அவர் போராட்டம் அறிவிப்பதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியது தொடர்பான செய்தியானது 2022 ஜூன் 08 அன்று வெளியிட்டுள்ளது. அதில் "ரோஹித் சக்ரதீர்த்தா கமிட்டியால் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களை அரசு திரும்பப் பெற வேண்டும். அது வரை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நிறுத்தாது. குவெம்பு, பகத் சிங் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்ட பிரபலங்களைப் பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட இந்த திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படத் தகுதியானவை" என்று கூறியுள்ளார்.



இது குறித்து டைம்ஸ் நவ் 2022 ஜூன் 18 அன்று வெளியிட்டுள்ள செய்திகளையும் கீழேக் காணலாம்.



இதற்கு முன்பும் இதே போன்று திருத்தப்பட்ட 8-ஆம் வகுப்பு கன்னடம்-2 பாட புத்தகத்தில் 'கலவண்ணு கெட்டவரு' (காலத்தை எதிர்த்து வென்றவர்கள்) என்ற தலைப்பு கொண்ட அத்தியாயத்தில் ஒரு பத்தியில் "சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு புல்புல் பறவைகள் செல்வது வழக்கம், சாவர்க்கர் அந்த பறவைகளின் சிறகுகளில் அமர்ந்து பறந்து தாய்நாட்டிற்கு தினமும் செல்வார்" என்று உள்ளது. சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லாத நிலையில், இதற்கு எதிராக கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக பாட புத்தக சங்கம் (KTBS) பல விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 



முடிவு:

இதன் மூலம் திருத்தப்பட்ட கர்நாடக பாட புத்தகங்களுக்கு எதிராக டி.கே.சிவக்குமார் பாட புத்தகங்களை கிழிக்கும் நிகழ்வில் சவார்க்கர் குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதையும், 2022-இல் நடந்த நிகழ்வை, தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின் நடந்தது போன்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க