YouTurn

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என டிகே சிவக்குமார் கூறியதாக வீடியோவை தவறாகப் பரப்பும் பாஜகவினர்!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என டிகே சிவக்குமார் கூறியதாக வீடியோவை தவறாகப் பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

இ.ந்.தி கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை - ஸ்டாலின் நண்பர் & கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் DK சிவக்குமார். இது தெரியாமல் கனவு உலகத்தில் இருக்குற கொத்தடிமைகள் நிலை தான் பாவம்..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள், ஜூன் 01 அன்று முடிவுக்கு வந்தன. இதற்கான கருத்துகணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரான டிகே சிவக்குமார் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று கூறும் 7 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதியை ANI ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (ஜூன் 03) பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.

அதில் செய்தியாளர் ஒருவர், கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமாரிடம், "காங்கிரஸின் வெற்றி கணிப்பு என்னவாக இருக்கும்?" என்று கேட்கிறார், அதற்கு பதிலத்துள்ள டிகே சிவக்குமார், "அனைத்து (ஏழு) இடங்களிலும் வெற்றி பெறுவோம்" என்கிறார். செய்தியாளர் மீண்டும் அவரிடம் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கு பின்பான தேர்தல் கருத்துக்கணிப்புகள் (Exit Poll) குறித்து கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள டிகே சிவக்குமார், "எனக்கு அதில் நம்பிக்கையில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று பதில் கூறுகிறார். 

இதன் மூலம் வாக்குப்பதிவுக்கு பின்பான தேர்தல் கருத்துக்கணிப்புகள் (Exit Poll), பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று அறிவித்திருந்ததால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று டிகே சிவக்குமார் கூறியிருப்பதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. 



இதே போன்று Times Now ஊடகமும் இது குறித்து "பார்க்க: 2024 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமாரின் முதல் எதிர்வினை" என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளது.  இதன் மூலம் கருத்துகணிப்பு குறித்த கேள்விக்கே டிகே சிவக்குமார், பாஜக கூட்டணியின் வெற்றி குறித்த கருத்துகணிப்பு முடிவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு, பின்பு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

https://youtube.com/shorts/nYTrTDz2Z2I?si=2sVRJsEs3_b8MeYT

ஆனால் பரவி வரும் வீடியோவில், "காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று டிகே சிவக்குமார் பேசியிருப்பது போன்று முழுவீடியோவில் ஒரு சிறுபகுதியை மட்டும் எடுத்து எடிட் செய்து பாஜகவினர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: ராகுல்காந்தி தேர்தல் முடிவுக்கு பின் தாய்லாந்து செல்லவுள்ளதாகப் பரவும் போலி விமான டிக்கெட்!

முடிவு:

நம் தேடலில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என டிகே சிவக்குமார் கூறியதாக பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. முழு வீடியோவில் இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தான் அவர் கூறியிருக்கிறார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க