YouTurn

‘விஜய்யை தலைவன் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை’ என்று கூறினாரா இயக்குநர் சேரன்?

‘விஜய்யை தலைவன் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை’ என்று கூறினாரா இயக்குநர் சேரன்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘விஜய்யை தலைவன் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை’ என்று கூறினாரா இயக்குநர் சேரன்?

விரிவான விளக்கம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை தலைவன் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என்று குறிப்பிட்டு இயக்குநர் சேரன் கூறியதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


#TVKVijay #Cheran #Vijay pic.twitter.com/oHmmwQ2E2p

— Spicy Chilli (@SpicyChilli4U) October 12, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் செய்தியின் உண்மைத்தன்மையை அறிய, இயக்குநர் சேரனின் சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்தோம். அதில் இயக்குனர் சேரன், பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது.  நான் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடிந்தது. 


மேலும் அவரது X பக்கத்தில் இது குறித்து, “உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்… ரொம்ப தவறா இருக்கு @actorvijay. நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை.. அப்போதான் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது” என்பதாகவும் பதிவிட்டிருந்தார்.


முடிவு: 


நம் தேடலில், தவெக தலைவர் விஜய்யை தலைவன் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என்று குறிப்பிட்டு இயக்குநர் சேரன் கூறியதாகக் கூறி பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.