YouTurn

Oreo பிஸ்கட் நிறுவனம் நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூடத்தில் தனது தயாரிப்புகளை பாதுகாக்க vault அமைத்துள்ளதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது.

Oreo பிஸ்கட் நிறுவனம் நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூடத்தில் தனது தயாரிப்புகளை பாதுகாக்க vault அமைத்துள்ளதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2020ஆம் ஆண்டு ஓரியோ நிறுவனம் தனது விளம்பரத்திற்காக Global oreo vault என்று எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது உண்மை போல் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

உலகளவில் பல நாடுகள் இடையே அதிகரிக்கும் மோதலால் பெரும் நெருக்கடி வரலாம் என்பதை கருத்தில் கொண்டு ஓரியோ(Oreo) பிஸ்கட் நிறுவனம் நார்வேயின் பனிப்பிரதேச ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் தனது தயாரிப்புகளை பாதுகாக்க கான்கிரீட் பதுங்கு குழியை அமைத்துள்ளது; இதற்கு முன்பு விதைகள் மட்டுமே இந்த முறையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது பிஸ்கட், பவுடர் மில்க் உள்ளிட்டவற்றை பாதுகாக்க தொடங்கி உள்ளது.

ARCHIVED LINK

விரிவான விளக்கம்

உலகில் எப்படிப்பட்ட பேராபத்து வந்தாலும், உலக நாடுகள் அனைத்தும் இனி வரக்கூடிய காலகட்டங்களில் வாழும் மக்களுக்காக செடி, விதைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நார்வே நாட்டில் எப்போதும் குளிருடன் காணப்படும் மலைப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இடம் தான் GLOBAL SEED VAULT. தற்போது அந்த பகுதியில் ஓரியோ(Oreo) பிஸ்கட் நிறுவனம் தனது தயாரிப்புகளை பாதுகாக்க கான்கிரீட் பதுங்கு குழியை அமைத்துள்ளதாக மார்ச் 21ஆம் தேதி தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் இதற்கு முன்பு விதைகள் மட்டுமே இந்த முறையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது பிஸ்கட், பவுடர் மில்க் உள்ளிட்டவற்றை பாதுகாக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்திருந்தது. தற்போது இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து தினமலர் நீக்கியது.



உண்மை என்ன ?

இந்த செய்தி குறித்து தேடி பார்க்கையில்,  OREO COOKIE-ன் யூடியூப் பக்கத்தில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி GLOBAL OREO VAULT என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் 2018 VP1 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருப்பதால், வரும் தலைமுறைகளுக்கு OREO குக்கீகளை கொண்டு செல்வதற்காக நார்வேயின் ஸ்வால்பார்டின் பகுதியில் உலகளாவிய OREO வால்ட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தனர். மேலும் global seed vault மூலம் ஈர்க்கப்பட்டு, Global oreo vaultக்கு யோசனை கிடைத்ததாகவும் அதில் கூறியுள்ளனர்.



இதையடுத்து OREO நிறுவனம் வெளியிட்ட இந்த வீடியோ குறித்து தேடி பார்த்தோம். அப்போது OREO மற்றும் 360i ஆகிய நிறுவனங்கள் இணைந்து  GLOBAL OREO VAULT என்ற விளம்பரத்தை இயக்கியுள்ளதாக  The Drum Awards-ன் இணையதள பக்கத்தில் 2021 ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த விளம்பரம் 2021ஆம் ஆண்டிற்கான Drum விருதுகளில் ‘Best Social Stunt’ விருதை வென்றதாக குறிபிடப்பட்டிருந்தது. 

மேலும் இது குறித்து தேடி சென்றோம். அப்போது  shortyawards-ன் இணையதள பக்கத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இந்த விளம்பரத்தை இயக்க 35 நாட்கள் ஆனாதாகவும், திரைப்பட நடிகர்கள் மற்றும் Mondelez  ஊழியர்கள் அடங்கிய குழுவால் இதற்கு உண்மையான உணர்வைக் கொடுக்க முடிந்ததாவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் 13வது விருது வழங்கும் விழாவில், ஓரியோ விளம்பரத்திற்காக விருது வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png


முடிவு : 

கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், Svalbard-ல் Global oreo vault அமைக்கப்பட்டுள்ளதாக 2020 முதலே பேசுப்பட்டு வரும் ஒரு புனைவு கதை என்பது உறுதியானது. ஆனால் தற்போது தினமலர் செய்தி ஊடகம் அதை உண்மை போல் வெளியிட்டது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க