YouTurn

‘ஓம் சாந்தி’ என்று கூறி உரையை முடிந்த இந்தோனேசியா அதிபர் என்று செய்தி வெளியிட்ட தினமலர்!

‘ஓம் சாந்தி’ என்று கூறி உரையை முடிந்த இந்தோனேசியா அதிபர் என்று செய்தி வெளியிட்ட தினமலர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ, உலக அமைதி, காசா பிரச்னைக்கு தீர்வை வலியுறுத்தி தன் உரையை முடிக்கும்போது, “சலாம், ஓம் சாந்தி சாந்தி ஓம்” என்று கூறுகிறார். அவர் “ஓம் சாந்தி” மட்டும் கூறி உரையை முடித்தது போன்று தினமலர் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளது.

பரவிய செய்தி

ஐ.நா., சபையில் ஒலித்த ‘ஓம் சாந்தி’

சொன்னது இந்தோனேசியா அதிபர்

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஐ.நா., பொதுச்சபையில் இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் அதிபர் பிரபாவோ சபியான்டோ 19 நிமிடம் உரையாற்றினர். அப்போது அவர் உரையில் உலக அமைதி, காஸா பிரச்னைக்கு தீர்வை வலியுறுத்தினார். தன் உரையை முடிக்கும்போது, 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்' என்ற சமஸ்கிருத மந்திரத்தை சொல்லி முடித்ததாக தினமலர் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 


உண்மை என்ன? 

தினமலர் ஊடகம் வெளியிட்ட இந்த செய்தி குறித்து தேடினோம். அப்போது India Today ஊடகப்பக்கத்தில் ”Indonesia's President Ends UN Speech With 'Om Shanti' Peace Chant” என்ற தலைப்பில் செப்டம்பர் 24, 2025 அன்று இந்த செய்தியை வீடியோவாக வெளியிட்டிருந்தது. அதில் அவர், "Wassalamu'alaikum warahmatullahi wabarakatuh, Shalom, Om Shanti Shanti Shanti Om” என்றே கூறுகிறார். இதில் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம் என்று மட்டுமே கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. 


இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். Times Of India ஊடகப்பக்கத்தில், ”From 'Wassalamu'alaikum' to 'Om Shanti': Indonesian President Prabowo Subianto's secular sign off at UNGA -watch” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சபியான்டோ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தனது உரையை பன்முக பிரியாவிடையுடன் முடித்தார். இஸ்லாம், இந்து மதம், யூத மதம் மற்றும் பெளத்த மதங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். "வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ், ஷாலோம், ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம், நமோ புத்தாய். மிக்க நன்றி" என்று அவர் கூறியதாக அதில் இருந்தது. 


அதே போல் Press Trust of India எக்ஸ் பக்கத்தில், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ ஐ.நா.வில் தனது உரையை, "வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாது, ஷாலோம், ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம். நமோ புத்தாய. மிக்க நன்றி" என்று கூறி முடித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 

நம் தேடலில், ஐ.நா. பொதுச்சபையில் பேசிய, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ,  உலக அமைதி, காசா பிரச்னைக்கு தீர்வை வலியுறுத்தி தன் உரையை முடிக்கும்போது, "வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாது, ஷாலோம், ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம். நமோ புத்தாய. மிக்க நன்றி" என்றே கூறுகிறார். அவர் “ஓம் சாந்தி” மட்டும் கூறி உரையை முடித்தது போன்று தினமலர் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க