YouTurn

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து நூதனம் போராட்டம் எனப் பரவும் புதுச்சேரி வீடியோ!

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து நூதனம் போராட்டம் எனப் பரவும் புதுச்சேரி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்துச் செய்யப்பட்ட நூதன போராட்டம் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் ஒரு சாமானியன் மின் கட்டணம் செலுத்துகிறார்.

X link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் 4.83 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாமானியர் ஒருவர் கோவணம் கட்டிக்கொண்டு மின்கட்டணம் செலுத்த வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவில் கோவணம் கட்டிக்கொண்டு இருப்பவர், ’பாண்டிச்சேரியில் மின் கட்டணம் உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனப் பேசுவதைக் கேட்க முடிகிறது. மேலும் டெல்லி, பஞ்சாபில் 100 யூனிட் குறைவான கட்டணம் உள்ளது. பாண்டிச்சேரியில் மட்டும் ஏன் இப்படியுள்ளது என்கிற கேள்வியை எழுப்புகிறார். 

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதுதொடர்பாகத் தினமலர் யூடியூப் பக்கத்தில் வெளியான செய்தியில், எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


முதல் 100 யூனிட்டுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.25 ஆக இருந்த மின்கட்டணம் ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 101 - 200 யூனிட்டுக்கு 4 ரூபாயாகவும் 201 - 300 யூனிட் வரை 6 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 301 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 7.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த மின் கட்டண உயர்வைக் கண்டித்து சுத்தம் சுந்தர் ராஜன் என்ற சமூக ஆர்வலர் கோவணம் கட்டிக்கொண்டு புதுச்சேரி உப்பளத்திலுள்ள மின்துறை அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ தளத்தில் வெளியாகியுள்ளது. 


தமிழ்நாட்டில் வீடுகளில் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதுவே புதுச்சேரியில் ரூ.270 கட்டணம் விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இந்த சலுகை நடைமுறையில் உள்ளது. இம்மாதிரியான விஷயங்களை குறிப்பிட்டுத்தான் சுத்தம் சுந்தர ராஜன் நூதனமான முறையில் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் நடந்த இடமே தமிழ்நாடு எனத் தவறாக பரப்புகின்றனர்.

இவர் இதற்கு முன்னர் புதுச்சேரியில் சாலைகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும் நூதனமான முறையில் போராட்டம் செய்துள்ளார். புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி செய்வது குறிப்பிடத்தக்கது.

முடிவு:

புதுச்சேரி மின்கட்டண உயர்வைக் கண்டித்துச் செய்யப்பட்ட நூதன போராட்டத்தைத் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க