YouTurn

’முகுந்த் வரதராஜன் ஒரு போர் குற்றவாளி’ என்று திருமுருகன் காந்தி சொன்னாரா? உண்மை என்ன?

 ’முகுந்த் வரதராஜன் ஒரு போர் குற்றவாளி’ என்று திருமுருகன் காந்தி சொன்னாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆயுதமில்லாமல் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரை கொல்வது என்ற Summary Execution-னை மிகைப்படுத்தி உயர்வாக காட்சிபடுத்திய இயக்குனரை திருமுருகன் காந்தி விமர்சனம் செய்தார்.

பரவிய செய்தி

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன்

ஒரு போர் குற்றவாளி!

திராவிட சித்தாந்தவாதி திருமுருகன்

காந்தி சர்ச்சைப் பேச்சு..!

இது பற்றி உங்கள் கருத்து என்ன..?


image.png


X link 


விரிவான விளக்கம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாகும். ஏற்கனவே, இந்தத் திரைப்படம் ‘சிறுபான்மையினருக்கு எதிரான உணர்வுகளை மக்கள் மத்தியில் திணிக்கிறது’ என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். கடந்த நவம்பர் 8 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி, ’திரைப்படத்தில் காஷ்மீரி மக்கள் சித்தரிக்கப்பட்ட விதத்தையும், நிராயுதபாணியான ஒருவரைக் கொன்றது போன்ற போர்க் குற்றங்களைச் உயர்வாக (valourises) காட்டியதையும்’ கண்டித்துப் பேசினார்.


இதற்கிடையில், ’தமிழ் ஜனம்’ செய்தித்தளம், ’மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ஒரு போர் குற்றவாளி’ என்று திருமுருகன் பேசியதாக செய்தி வெளியிட்டு, இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கருத்தும் கேட்டிருந்தது. 


https://x.com/i/web/status/1856257302644293977


உண்மை என்ன? 


’அமரன்’ திரைப்படம் பற்றி திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பில் பேசிய காணொளியை ‘நீர்த்திரை’ யூட்யூப் தளம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி பதிவிட்டிருந்தது. 48 நிமிடங்கள் நீள அந்த வீடியோவின் 30ஆவது நிமிடத்தில் படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு காட்சியைப் பற்றி பேசுகிறார்.  


”அமரன் படத்தின் இடைவேளைக்கு முன்பு ஒரு காட்சியில், அடிபட்டு கிடக்கும் தீவிரவாதி (திரைப்படத்தில் சித்தரித்துள்ளதன் அடிப்படையில்) ஒருவரை கதாநாயகன் சுட்டுக்கொல்கிறார். இதற்கு Summary Execution என்று பெயர். இது war crime-ல்  (போர்க் குற்றத்தில்) சேரும். இதுபோல் முகுந்த் வரதராஜன் உண்மையில் செய்தார் என்று இயக்குனர் சொன்னால், முகுந்த் வரதராஜன் மீது சர்வதேச அளவில் போர்க்குற்றத்தின் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்ய முடியும். முகுந்த் வரதராஜனை போர்க்குற்றவாளியாக காட்டியது இயக்குனரா? உண்மையில் அப்படியொரு சம்பவம் நடந்ததாக எனக்கு தெரியாது. ஆயுதமில்லாமல் அடிபட்டு கிடப்பவரை ஒரு இராணுவம் எப்படி கொல்லமுடியும்? ஒரு தீவிரவாதி கொலை செய்யலாம், மாபியா, ரௌடி கொலை செய்யலாம், வில்லன் கொலை செய்யலாம். ஆனால் ஒரு ஹீரோ எப்படி கொலை செய்வார்?” என்று திருமுருகன் காந்தி பேசியிருந்தார்.



எந்தவொரு சட்ட கட்டமைப்பிற்கு உட்படாமல் தனிநபர்களை வேண்டுமென்றே கொலை செய்வதற்கு  Summary or Arbitrary Execution என்று பெயர். இது அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். இதுபோன்ற குற்றங்களை விசாரிப்பதற்கெனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் ஒரு சுயாதீன நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதன்மூலம், திரைப்படத்தின் அந்த குறிப்பிட்ட காட்சியில் Summary Execution என்பது உயர்வாக கருதும் வகையில் காட்சிபடுத்தப்பட்டிருப்பது ‘பிரச்சனைக்குரியது, மனித உரிமைகளுக்கு எதிரானது’ என்று பொருள்படும் அடிப்படையில் திருமுருகன் காந்தி பேசியிருந்தார். இதில் எங்கும் ‘முகுந்த் வரதராஜன் ஒரு போர் குற்றவாளி’ என்று அவர் சொல்லவில்லை. மாறாக, ஆயுதமில்லாமல் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரை கொல்வது என்ற Summary Execution-னை உயர்வாக காட்டுவதன் மூலமாக இயக்குனர் முகுந்த் வரதராஜனை போர்க்குற்றவாளியாக காட்சிபடுத்துகிறாரா? என்று கேள்விதான் கேட்கிறார். 


இதனை திரித்து ’மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ஒரு போர் குற்றவாளி’ என்று திருமுருகன் காந்தி சொன்னதாக  ’தமிழ் ஜனம்’ செய்தித்தளத்தில் தவறாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. 


முடிவு: 


’மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ஒரு போர் குற்றவாளி’ என்று திருமுருகன் காந்தி சொன்னதாக  ’தமிழ் ஜனம்’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.