YouTurn

“முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறினாரா? செய்தியை திரித்து வெளியிட்ட பாலிமர் நியூஸ்!

“முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறினாரா? செய்தியை திரித்து வெளியிட்ட பாலிமர் நியூஸ்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறியதாக ‘பாலிமர் நியூஸ்’ வெளியிட்டுள்ள நியூஸ்கார்டு திரிக்கப்பட்ட செய்தியே.

பரவிய செய்தி

"திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்" - வி.சி.க தலைவர் திருமாவளவன்


Post Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளநிலையில், அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் கூட்டணி குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் "திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என்று கூறியதாகக் குறிப்பிட்டு 'பாலிமர் செய்தி' நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. 


இந்நிலையில் சமூக ஊடகங்களில் பலரும் இந்த நியூஸ் கார்டை குறிப்பிட்டு, திமுக கூட்டணியில், ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணி அமையவுள்ளது. அதனால் தான் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 




உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், “திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியதாக ‘பாலியர் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தி திரிக்கப்பட்ட செய்தியே என்பதை அறிய முடிந்தது. 


திருமாவளவன் இது குறித்து பேசியுள்ள முழு வீடியோவில், “2011 பொதுத்தேர்தலுக்கு பிறகு சாதிய மற்றும் மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்; அக்கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் இருக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம்” என்றே கூறியுள்ளார். 



தொடர்ந்து அவர் பேசுகையில், “திமுக கூட்டணியில் எந்த கட்சி இருக்க வேண்டும் என்கிற முடிவை திமுக தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து திமுகவுக்கு ஆலோசனை கொடுக்கும் அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்” என்றும் பேசியுள்ளார். 


இதனை, விசிக தலைவர் திருமாவளவன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவை ஆய்வு செய்ததன் மூலமும் உறுதி செய்ய முடிகிறது. இந்நிலையில் திருமாவளவன் பேசியுள்ளதை 'பாலிமர் நியூஸ்' தவறாகத் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது. 



இதே போன்று, கூட்டணி குறித்த மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும், “பாஜக, அதிமுக கட்சிகள் இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம். பாமகவின் ராமதாஸ் அணி திமுகவில் இணைந்தால் 14 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவின்படி தான் நடப்போம்” என்றே திருமாவளவன் கூறியுள்ளார். 



முடிவு: 


நம் தேடலில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என திருமாவளவன் கூறியதாக ‘பாலிமர் நியூஸ்’ வெளியிட்டுள்ள நியூஸ்கார்டு திரிக்கப்பட்ட செய்தியே என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க