
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
இந்நிலையில் விருது விழாவில் தனது தோள் மீது விஜய் கை போட்ட போது, அதை நிராகரித்து, மாணவி ஒருவர் செய்த செயலைப் பாருங்கள் என்று கூறி, 11 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் மாணவி ஒருவருக்கு விஜய் சால்வை அணிவித்துவிட்டு, புகைப்படம் எடுப்பதற்காக மாணவி தோள் மீது கைப் போடுவதையும், ஆனால் மாணவி அந்த கையை கீழே இழுத்து விடுவதையும் பரவி வரும் காண முடிகிறது.
This creepy fellow Joseph was shown his aukaat. Brave one kudos.
I literally want to see this happen to Pappu. He is more creepier than this Joseph. pic.twitter.com/VORod49OPZ
— Tathvam-asi (@ssaratht) June 30, 2024
மாணவியிடம் பாடம் கற்றுக் கொண்ட நடிகர் விஜய்.
மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க யார் கொடுத்த உரிமை?
இதே புர்கா போட்ட பெண் மீது இவ்வளவு தைரியமா கை போடுவியா?
ஆட்டிப்படைக்கும் விளம்பர மோகம்!
அப்பட்டமான விதிமீறல்!
பெண் குழந்தைகள் வளர்ந்து விட்டால் தந்தை கூட தயங்கியே… pic.twitter.com/NWgu639UnD
— Dr.Parameswari ( மோடியின் குடும்பம்) (@bjp_parameswari) June 30, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்ச்சியின் முழு வீடியோவை, Trend Talks தனது யூடியூப் பக்கத்தில் ஜூன் 28 அன்று வெளியிட்டிருந்தது.
அதில் சரியாக வீடியோவின் 1:30 வது நிமிடத்தில், பரவி வரும் வீடியோவில் இடம்பெற்றுள்ள மாணவிக்கு விஜய் சால்வை அணிவித்து விருது வழங்குகிறார். அதைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக மாணவி மற்றும் மாணவி உடன் வந்திருந்த மற்றுமொரு குழந்தையின் தோள் மீது விஜய் கை போடுகிறார். உடனே அந்த மாணவி கைகளை கோர்த்து நிற்குமாறு விஜயிடம் வேண்டுகோள் விடுப்பதையும், அதைத் தொடர்ந்து, இருவரின் கைகளையும் கோர்த்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்வதையும் வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.
இதே போன்று News Tamil 24x7 ஊடகமும் தனது எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோவை "தோள் மீது 'விஜய்’ கை போட்டு போட்டோ எடுக்கும்போது மாணவி செய்த செயல்" என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது. அதிலும் மாணவி கைகளை கோர்த்து நிற்குமாறு விஜயிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, விஜயின் கைகளை கோர்த்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் அந்த மாணவி.
தோள் மீது 'விஜய்’ கை போட்டு போட்டோ எடுக்கும்போது மாணவி செய்த செயல்!#Vijay #ThalapathyVijay #VijayThalapathy #TVK #TamilagaVettriKazhagam #TVKVijay #NewsTamil24x7 pic.twitter.com/g828QIDCJW
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 28, 2024
இதன் மூலம் News Tamil 24x7 ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடுத்து, சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: “புஸ்ஸி ஆனந்த் ஒரு நல்ல தலைவர்” என நடிகர் விஜய் பேசியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!
இதற்கு முன்பும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் தொடர்பாக பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பப்பட்டன. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: பிரிவினை பேசும் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாகப் பரவும் போலிசெய்தி!
முடிவு:
நம் தேடலில், மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தன் தோள் மீது விஜய் கை போட்ட போது நிராகரித்த மாணவி எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.