YouTurn

ராமர் கொடியை அகற்றிய முஸ்லீம் இளைஞர் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ

ராமர் கொடியை அகற்றிய முஸ்லீம் இளைஞர் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இதே மாதிரி தட்டி கேட்கும் நிலைமை தமிழ்நாட்டில் கூடிய விரைவில் வரவேண்டும் அப்போதுதான் திராவிடன் தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்படுவான்..!



X Link:

விரிவான விளக்கம்

ராமர் கொடியை அகற்றிய முஸ்லீம் இளைஞரின் நிலையைப் பாருங்கள், தமிழ்நாட்டிலும் இதே மாதிரி தட்டிக் கேட்கும் நிலை ஏற்படவேண்டும் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.

பரவி வரும் அந்த வீடியோவில், வீட்டின் முன்புறம் நடப்பட்டிருந்த ராமர் கொடியை முஸ்லீம் இளைஞர் ஒருவர் அகற்றுவதையும், அதை அந்த வீட்டின் பெண் தடுப்பதையும் பார்க்க முடிகிறது. பின்னர் அங்கு வரும் மற்றொரு நபர் அந்த முஸ்லீம் இளைஞரிடம் சண்டை போட்டு ராமர் கொடியை அந்த வீட்டில் மீண்டும் நடுவதையும் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் வரும் இளைஞரின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.

Himanshu Jatav (Hemraj) என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் சுயவிவரப் புகைப்படத்தையும் (Profile Picture), வீடியோவில் வரும் நபரின் படத்தையும் ஒப்பீடு செய்ததில், இருவரும் ஒரே நபர் தான் என்பதை தெளிவுபடுத்த முடிந்தது. 




மேலும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் (iamhemraj1234) ஆய்வு செய்து பார்த்தோம். பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்கள், அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. அவை போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் (Scripted Videos) என்பதை அறிய முடிந்தது. மேலும் பரவி வரும் வீடியோவில் இடம் பெற்றிருந்த அதே நபர்கள், இது போன்ற பல்வேறு வீடியோக்களில் நடித்திருந்ததையும் உறுதிபடுத்த முடிந்தது



ஆனால் ராமர் கொடியை முஸ்லீம் இளைஞர் அகற்றுவது போன்று பரவி வரும் வீடியோ குறித்து இவரின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடியதில், எங்கும் இந்த வீடியோ காணப்படவில்லை. நியூஸ் மீட்டர் குறிப்பிட்டுள்ள செய்திகளின்படி, ஹேம்ராஜ் தாகூர் இந்த வீடியோவை நீக்கிவிட்டார் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: பங்களாதேஷில் புர்கா அணியாத இந்துப் பெண்ணை பேருந்தில் ஏற்றவில்லை எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

மேலும் படிக்க: லிப்டில் செல்லும் பெண்களிடம் நகையைப் பறிப்பதாகத் தவறாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

முடிவு:

நம் தேடலில், ராமர் கொடியை அகற்றிய முஸ்லீம் இளைஞரின் நிலையைப் பாருங்கள் எனப் பரவும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், இது போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க