YouTurn

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடினரா?

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடினரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில், அவர்கள் வங்கதேச அணிக்கான ஜெர்ஸி அணிந்தே விளையாடி வருகின்றனர்.

பரவிய செய்தி

பங்களாதேஷ் இந்தியாவ விட முன்னேறிச்சின்னு இந்த மர்ம நபர்கள் & திமுக உபிஸ்க உருட்டுறது உண்மை தான் போல கிரவுண்ட்ல கொசு மருந்து அடிக்கிறவங்களுக்கு கூட புல்லா கவர் பண்ற யூனிபார்ம் கொடுத்துருக்காங்னுங்க…


Post Link

விரிவான விளக்கம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து தற்போது நடத்துகின்றன. நவ. 2-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டி கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. 


இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடுகின்றனர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 




உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு,  ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடினார்களா என்பது குறித்து ஆய்வு செய்ததில், அவர்கள் வங்கதேச அணிக்கான ஜெர்ஸி அணிந்தே விளையாடி வருகின்றனர் என்பதை உறுதி செய்ய முடிந்தது. 



மேலும் பரவி வரும் புகைப்படத்தில், “Gemini AI”-ன் லோகோ இடம் பெற்றிருந்ததால், சந்தேகம் எழுந்தது. எனவே பரவி வரும் புகைப்படத்தை, “Undetectable AI” இணையதளப் பக்கத்தில் பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்பதை அறிய முடிந்தது. 



முடிவு: 


நம் தேடலில்,  ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடுவதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க