YouTurn

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் கைது செய்யப்பட்டாரா சேலம் ஆசிரியர்?

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் கைது  செய்யப்பட்டாரா சேலம் ஆசிரியர்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையிலும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பதிவிட்டு வந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பரவிய செய்தி

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் எனது தந்தையை CYBER CRIME போலீசார் அடித்து கைது செய்து சென்றுள்ளனர் என்று கலியுக கண்ணனின் மகள் கொடுத்த பேட்டி.
#Salem | #NationalEducationPolicy | #TNPolice | #TamilJanam



X Link


விரிவான விளக்கம்

ஒன்றிய அரசு கொண்டுவர நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை அதன் அங்கமான மும்மொழிக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிரான கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், சேலத்தில் டுட்டோரியல் நடத்தி வரும் கலியுக கண்ணன் என்ற ஆசிரியர் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் எனது தந்தையை சைபர் கிரைம் போலீசார் அடித்து கைது செய்தனர்’ என்று  கைது செய்யப்பட்டவரின் மகள் கொடுத்த பேட்டியை ’தமிழ் ஜனம்’ என்னும் இணைய ஊடகம் பரப்பிவருகிறது. 

https://x.com/i/web/status/1900522506932678839

உண்மை என்ன?


இந்த வழக்கு சம்பந்தமாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) கைது செய்யப்பட்ட நபர், க.லி.யு.க க.ண்.ண.ன் (@slmsangikannan) என்ற பெயரில் ’எக்ஸ்’ தளத்தில் அருவருக்கத்தக்க வகையிலும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



இதனால், அதன்மீது சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 28.02.2025 அன்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா, பிரிவு 196 (1) வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் பகைமையை ஊக்குவித்தல், பிரிவு 192 கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல், பிரிவு 352 அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அவரது ட்விட்டர் பதிவுகளில் சில Archive செய்யப்பட்டு காணக் கிடைக்கிறது. அவற்றில் அருவருக்கத்தக்க அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்தி பல பதிவுகளை பதிவிட்டிருக்கிறார் கலியுக கண்ணன். அந்த வார்த்தைகளை மறைத்து அவரது பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட் சிலவற்றை இங்கே பதிகிறோம். அவரது இன்னும் பல பதிவுகள் இந்த தளத்தில் பதிவிடமுடியாத அளவிற்கு அநாகரிமானவையாக இருப்பதால் அவற்றை பதிவிட முடியவில்லை.




image.png


image.png



இதிலிருந்து, கலியுக கண்ணன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகப் பதிவிட்டதால் கைது செய்யப்படவில்லை, சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.


முடிவு:


கலியுக கண்ணன் என்பவர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து  அருவருக்கத்தக்க வகையிலும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பதிவிட்டு வந்துள்ளதால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனைத் திரித்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டதாக ‘தமிழ் ஜனம்’ ஊடகம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.