YouTurn

தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்தாரா புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி?

 தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்தாரா புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

'புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான்' என தவெக தலைவர் விஜய் குறித்து புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

பரவிய செய்தி

விஜய்க்கு கண்டனம்: புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான். அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை, மேலும் எங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துகொள்ளுங்கள் - புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தவெக தலைவர் விஜய், கரூர் துயரத்துக்கு பின் முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சமீபத்தில் பேசினார். 


இந்நிலையில் “புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான். அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை. மேலும் எங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி விமர்சனம் செய்ததாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.


#TVK_Pondy pic.twitter.com/kvOUb31ojN

— Ashok S (@AshokS857092585) December 10, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டம் தொடர்பாக கூறியுள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்ததில், அதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு “நன்றி, வணக்கம், வாழ்த்துகள், மகிழ்ச்சி” என்றே கூறியிருந்ததை,  “thefederal_india“ ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியின் மூலம் அறிய முடிந்தது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by The Federal (@thefederal_india)


இது தவிர அவர் வேறு எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. மேலும் விஜயின் பொதுக்கூட்டத்தை அவர் மொபைல் போனில் பார்ப்பது போன்ற வீடியோவும் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. 



இந்நிலையில் பலரும், “புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான். அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை. மேலும் எங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி விமர்சனம் செய்ததாகக் கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்த புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி எனப் பரவும் செய்திகள் போலியானது என்பது உறுதியாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க