யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக தலைவர் விஜய்யின் வண்டியை பின் தொடர்ந்து சென்று விபத்தில் உயிரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் விக்னேஷின் தந்தையுடன் அன்பில் மகேஷ் இருப்பது போன்று உள்ள புகைப்படத்தை, AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
எழவு வீட்டுல கூடவா டா AI use பண்ணுவீங்க?? க்ர்ர்ர் த்தூ!! நல்லாவே இருக்க மாடீங்கடா டேய்!!

விரிவான விளக்கம்
தஞ்சாவூரில் மார்ச் 4ம்தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பின்போது விஜய் பயணித்த பேருந்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 23 அன்று சிகிச்சைக்கு பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இறந்த விக்னேஷின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பது போன்று உள்ள புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் பரவி வரும் புகைப்படத்தில் ஜெமினி AI லோகோ இருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
எழவு வீட்டுல கூடவா டா AI use பண்ணுவீங்க?? க்ர்ர்ர் த்தூ!! நல்லாவே இருக்க மாடீங்கடா டேய்!! 🤮 https://t.co/HxYTNzIAhQ pic.twitter.com/oTIKXWKU5c
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மார்ச் 27 அன்று அமைச்சர் அன்பில் மகேஷ் இறந்த விக்னேஷின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது குறித்து “தினகரன்“ ஊடகப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இது குறித்து, “நியூஸ் தமிழ்“ ஊடகப் பக்கத்திலும் “தவெக தலைவர் விஜய்யின் வண்டியை பின் தொடர்ந்து சென்று விபத்தில் உயிரி*ந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஸ்!” என்று குறிப்பிட்டு மார்ச் 26 அன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் வண்டியை பின் தொடர்ந்து சென்று விபத்தில் உயிரி*ந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஸ்!
#Vijay #TVKVijay #Tanjore #AnbilMahesh #DMK #Newstamil24x7 pic.twitter.com/Dx8l2snKnV
முடிவு:
நம் தேடலில், இறந்த விக்னேஷின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பது போன்று உள்ள புகைப்படம், AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று கூறி தவெகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.