YouTurn

தவெகவின் 'எனது பூத் - தவெக பூத்' பயிற்சி பட்டறையை காப்பி அடித்ததா திமுக?

தவெகவின் 'எனது பூத் - தவெக பூத்' பயிற்சி பட்டறையை காப்பி அடித்ததா திமுக?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

த.வெ.க சார்பில் 'எனது பூத் - தவெக பூத்' என்ற பெயரில் சிறப்பு பயிற்சி அறிவிப்பதற்கு முன்பே, திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சி கூட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.

பரவிய செய்தி

எனது பூத், தவெக பூத் ன்னு ஒன்னு ஸ்டார்ட் பண்ணி 5 நாள் ஆகல அதுக்குள்ள, அதே மாதிரி காப்பி அடிச்சி ப்ரோமோஷன் ஸ்டார்ட் பண்ணிட்டாரு அங்கிள்



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தவெக தலைவர் விஜய், கரூர் துயரத்துக்கு பின் முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசினார். அதில் விஜய் திமுகவைக் குறிப்பிட்டு பல விமர்சனங்களை முன்வைத்து பேசினார். 


இதைத் தொடர்ந்து தற்போது தவெகவினர் பலரும், ““என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற பெயரில் திமுக தொடங்கவுள்ள பரப்புரைக் கூட்டம், தவெக ஏற்கனவே தொடங்கிய “எனது பூத், தவெக பூத்“ என்ற சிறப்பு பயிற்சியின் நகலே, திமுக காப்பி அடித்துள்ளது” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன?  


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற பெயரில் திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி நடத்துவது குறித்தான அறிவிப்பு அக்டோபர் 19 அன்றே வெளியிடப்பட்டுவிட்டது என்பதை “இந்து தமிழ் திசை” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது. 



அதில், “பொதுச்செயலாளர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாமல்லபுரத்தில் தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் வரும் அக்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இதில், திமுக மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி”  பயிற்சி கூட்டம் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26 ஆம் தேதி மடல் எழுதியிருப்பதையும் காண முடிந்தது. 



அதன்படி, இது குறித்தான பயிற்சி கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்டோபர் 28 அன்று நடைபெற்றுள்ளது. இதை குறித்து “Kalaignar TV News” யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. 



முடிவு:


நம் தேடலில்,  த.வெ.க சார்பில் 'எனது பூத் - தவெக பூத்' என்ற பெயரில் சிறப்பு பயிற்சி அறிவிப்பதற்கு முன்பே, திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சி கூட்டம் தொடங்கப்பட்டுவிட்டது என்பது தெளிவாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க