யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை அவர் அங்குள்ள கம்யூட்டர்களில் ஆய்வு செய்வதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழ்நாட்டில் கடலோர பகுதிகள் வழியாக நகர்ந்து வருகிறது. சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவம்பர் 30) ஆய்வு செய்தார்.
இந்நிலையில் கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதாகக் கூறி புகைப்படம் ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 30 அன்று பதிவு செய்திருந்த வீடியோவைக் காண முடிந்தது. அதில் “பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிட்வா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்போடு இருப்போம்“ என்றும் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், அங்குள்ள கம்யூட்டர்களில் அவர் ஆய்வு செய்வதைக் காண முடிகிறது. மேலும் அந்த வீடியோவில் 02:32 முதல் 02:36 வரையிலான நேரத்தில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளன. அதில் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் கம்யூட்டர் இயக்கத்தில் இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிட்வா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்போடு இருப்போம்.
#CycloneDitvah pic.twitter.com/ndswIo210F
மேலும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் புயல், கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை அவர் ஆய்வு செய்வது குறித்து மற்றொரு பதிவும் அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
புயல் -கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.@chennaicorp அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தோம்.
கனமழை நேரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு… pic.twitter.com/gzL0vtev0T
இந்நிலையில் கம்யூட்டரின் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.