YouTurn

மோடி வருகையையொட்டி ‘அல்லாஹு அக்பர்’ என்ற வாசகம் மறைக்கப்பட்டதா? உண்மை என்ன?

மோடி வருகையையொட்டி ‘அல்லாஹு அக்பர்’ என்ற வாசகம் மறைக்கப்பட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மசூதியின் கோபுர மினார் கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதாகவும் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் சொல்லப்பட்டதால் மசூதி நிர்வாகத்தால் மறைக்கப்பட்டது.

பரவிய செய்தி

இது வட இந்திய இல்லைங்க. முஸ்லிம் வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தும் திமுக ஆட்சியில், இராமேஸ்வரம் பிரதமர் நரேந்திர மோடி வருகையை யொட்டி நூற்றாண்டு பழமையான மசூதி மினாராவில் உள்ள அல்லாஹு அக்பர் என்ற எழுத்தை மூடி உள்ளது தமிழக அரசு. திமுக அடிமைகளே இதுக்கும் வந்து முட்டு கொடுங்க

image.png

Image


Link / Archive Link

விரிவான விளக்கம்

புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் இரயில் பாலத்தைத் திறந்து வைப்பது, ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான இரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைப்பது போன்றவை பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் 6ஆம் தேதி நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கின்றன. 

இந்நிலையில் பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையையொட்டி பாம்பன் மசூதி கோபுரத்தில் (மினார்) இருந்த LED விளக்கால் ஆன ‘அல்லாஹு அக்பர்’ என்ற வாசகம் திரையிட்டு மூடப்பட்டதுள்ளதாக ’இந்திய தேசிய லீக்’ கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ தளத்தில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி பதிவிட்டிருந்தார். 


உண்மை என்ன?


’மோடி வருகை, பாம்பன் மசூதி கோபுர விளக்கு மூடல்’ என்ற Keywords பயன்படுத்தி இணையத்தில் தேடியதில், ’புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சியின் யூட்யூப் தளத்தில் இதுகுறித்த ஒரு செய்திக் காணமுடிந்தது. 


image.png


ஏப்ரல் 3ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘அரசின் முன் அனுமதி இல்லாமல் அதிகமான உயரத்தில் LED விளக்கு அமைத்திருப்பதாகவும், அந்த மசூதியின் கோபுர மினார் கலங்கரை விளக்கம் போல் தோற்றம் அளிப்பதுடன் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கடந்த மார்ச் 16ஆம் தேதியே காவல் துறை சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்படுகிறது. மேலும், ’இந்த LED விளக்கை ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் முன் அனுமதி பெற்று பொருத்திக்கொள்ளுமாறு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


மேலும் தேடியதில், ‘The NEWS Minute’ செய்தித்தளத்தில் இதுகுறித்து வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதன்படி மசூதியின் செயலாளர் சையத் முகமது கூறுகையில், ”காவல்துறை LED விளக்கு குறித்து நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளிடம் பேசி LED விளக்கைப் படகுகளுக்கு இடையூறாக இருக்கும் வகையில் இரவு நேரங்களில் பயன்படுத்துவதில்லை என்ற நிபந்தனையுடன் LED விளக்கை அமைப்பதற்கான அனுமதி வாங்கியதாக” குறிப்பிடுகிறார். 


மேலும் சையத் முகமது கூறுகையில், “கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி கோபுரத்தில் கட்டுமானப் பணி நடந்ததால் மசூதி கோபுரத்தில் உள்ள அந்த LED விளக்கு வெறும் 2 மணிநேரத்திற்கு மட்டுமே மூடப்பட்டதாக” குறிப்பிடுகிறார். 


இதிலிருந்து, பிரதமர் மோடியின் வருகைக்கும் மசூதி கோபுரத்தில் உள்ள ‘அல்லாஹு அக்பர்’ என்ற வாசகம் மறைக்கப்பட்டதற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது தெளிவாகிறது. 


முடிவு:


பிரதமர் மோடியின் வருகையையொட்டி மசூதி கோபுரத்தில் உள்ள ‘அல்லாஹு அக்பர்’ என்ற வாசகம் மறைக்கப்பட்டதாக ’தடா ரஹீம்’ பரப்புவது தவறான தகவலாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க