யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காணொளி இது.
பரவிய செய்தி
கர்நாடக வங்கியில் பணபரிவர்தனை செய்ய ஒரு இஸ்லாமிய பெண்மணி வந்துள்ளார் அவர் கன்னட மொழியில் வங்கி பெண் அலுவலரிடம் பேசியுள்ளார். ஆனால் வங்கி பெண் ஊழியரோ கன்னடத்தில் பேசாதே ஹிந்தியில் பேசு என வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி.
விரிவான விளக்கம்
“கர்நாடகாவில் கன்னட மொழியில் பேசிய வாடிக்கையாளரை, வங்கி அலுவலர் ஹிந்தியில் பேசக் கூறியுள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி தான் இது” என்று கூறி 23 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பெண்கள் இருவரும் கன்னடம் மற்றும் ஹிந்தியில் மாறி மாறி திட்டிக்கொள்வதை தெளிவகாக் காண முடிகிறது.
I’m from Tamil Nadu, but I firmly condemn the incident at Karnataka Bank where a woman was reportedly told “Don’t speak in Kannada, speak in Hindi.”
⁰This disrespect toward a state language is unacceptable anywhere in India. Stop Hindi imposition.
Requesting Hon’ble… pic.twitter.com/oNilbCqIOU
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “Public TV” ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ குறித்து செப்டம்பர் 29, 2025 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
வீடியோவில் இஸ்லாமிய பெண்ணே இந்தியில் பேசுகிறார். மற்றவர் கன்னடத்தில் பேசுகிறார். இந்நிலையில் உண்மையான வீடியோவை எடிட் செய்து, இஸ்லாமியப் பெண் கன்னடத்தில் பேசியிருப்பது போல சமூக ஊடகங்களில் பரப்பி உள்ளனர்.
மேலும் “Financial Express“ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி என்று குறிப்பிட்டே செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு பயணி கன்னடத்தில் பேச வேண்டும் என்று கூறுவதாகவும், மற்றொரு பயணி இந்தியில் பதிலளித்ததாகவும் கூறியுள்ளனர்.
இதன் மூலம், பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காணொளி இது. இதை கர்நாடகாவில் கன்னடத்தில் பேசிய முஸ்லீம் வாடிக்கையாளரை இந்தியில் பேசக் கூறிய வங்கி அலுவலர் எனக் கூறி தவறாகப் பரப்புகின்றனர் என்பது தெளிவாகிறது.
மேலும் உண்மையான வீடியோவில் இஸ்லாமிய பெண்ணே இந்தியில் பேசுகிறார். மற்றவர் அவரை கன்னடத்தில் பேசக் கூறுவதை தெளிவாகக் காண முடிகிறது. இந்நிலையில் வீடியோவை எடிட் செய்து பரப்புகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், கர்நாடகாவில் கன்னடத்தில் பேசிய முஸ்லீம் வாடிக்கையாளரை இந்தியில் பேசக் கூறிய வங்கி அலுவலர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.