YouTurn

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையின் புகைப்படமா? உண்மை என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையின் புகைப்படமா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகை ஒருவரின் புகைப்படத்தை Reshare செய்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.

பரவிய செய்தி

மீண்டும் இன்டாவில் சில்மிசம் செய்த பால்டாயில் 


image.png


 Xlink  | Archive Link

விரிவான விளக்கம்

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் துணை முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஒருவரின் புகைப்படம் Reshare செய்யப்பட்டதாகக் கூறி Screen shot ஒன்று சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை என்ன?


பரவி வரும் புகைப்படம் குறித்து Google Reverse Image Search மூலம் தேடியதில் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல என்பதை அறியமுடிந்தது.


மேலும், உதயநிதி ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் தேடியதில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்று எந்த ஒரு பதிவும் Reshare செய்யப்படவில்லை.



அப்பக்கத்தில் கடைசியாக மார்ச் 6 அன்று  “ஐந்தாண்டுகளில் திராவிட மாடல் அரசின் சாதனைகள்” என்று குறிப்பிட்டே வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோ பதிவிடப்பட்டுள்ள இடத்தில், நடிகை ஒருவரின் புகைப்படம் இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.



இவற்றிலிருந்து பரவி வரும் புகைப்படம் போலியானது மற்றும் எடிட் செய்து பரப்பப்பட்டு வருகின்றது என்பது உறுதியாகிறது.



இதற்கு முன்பும் இது போன்று எடிட் செய்து பரப்பப்படும் தவறான தகவல்களை நமது 'Youturn' பக்கத்தில் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க: தேர்தல் நேரத்தில் பரவும் போலியான நியூஸ் கார்ட்டுகள்!


மேலும் படிக்க: ‘India Today’ இதழ் விஜய் குறித்து அட்டைப்படம் வெளியிட்டதா? உண்மை என்ன?


மேலும் படிக்க: திமுக தேர்தல் வாக்குறுதி என்று பரப்பப்படும் போலியான படம்!


முடிவு :


நம் தேடலின் வழியாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் Instagram பக்கத்தில் நடிகை ஒருவரின் புகைப்படம் இருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டு தவறாகப் பரப்பப்படுகிறது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க