YouTurn

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக்-ஐ வெட்டியதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே !

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக்-ஐ வெட்டியதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜோயல் வாளினை பரிசாக அளித்து இருக்கிறார். அதை கையில் ஏந்திய படத்தை பதிவிட்டும் இருக்கிறார். மற்றொரு பதிவில் வேறொரு கத்தியால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேக்கை வெட்டும் படங்களையும் பதிவிட்டு உள்ளார்.

பரவிய செய்தி

இது போன்ற கத்தி வைத்து பிறந்த நாள் கேக் வெட்டினால் உடனே காவல்துறை வந்து கைது செய்யுமே?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கத்தி வைத்து பிறந்த நாள் கேக் வெட்டுகிறாரே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா? கைது செய்யுமா ?

அல்ல சட்டம் ஏழைகளுக்கு தானா? தி.மு.க அரசியல்வாதிகளுக்கு இல்லை என காவல்துறை கூறுமா?

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 27 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழகம் முழுவதும் ஏராளமான அரசியல் தலைவர்களும், திமுகவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பெரிய வாளை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டியதாக பாஜகவை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா புகைப்படம் ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கத்தி வைத்து பிறந்த நாள் கேக் வெட்டுகிறாரே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா? கைது செய்யுமா ? என்றும், சட்டம் ஏழைகளுக்கு தானா? தி.மு.க அரசியல்வாதிகளுக்கு இல்லை என காவல்துறை கூறுமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். அதே போல் சமூக ஊடகங்களில் பலரும் பட்டக்கத்தியால் கேக் வெட்டிய உதயநிதி என்றும் பரப்பி வருகின்றனர்.


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Thoothukudi S Joel என்ற பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் ”தாய்த் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாய்! மண், மொழி, மானம் காத்து இனப் பகைவர்க்கு சிம்ம சொப்பனமாய்!! கந்தக விழிகாட்டி, கர்ஜனை முழக்கமிட்டு திராவிடக் கூர்வாளாய் களமாடும்..ஈடு இணையற்ற “இளம் தலைவர்” பிறந்த நாளில் “கொள்கைப் போர்வாள்” பரிசளித்த உணர்ச்சிமிகு தருணம்…” என்று பதிவிட்டு, உதயநிதி அவர்கள் வாளை கையில் ஏந்திய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். 


இதிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜோயல் வாளினை பரிசாக அளித்து இருப்பது உறுதியானது.  


இதையடுத்து அந்த வாளில் தான் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டதா என்பது குறித்து தேடினோம். அப்போது அவரது முகநூல் பக்கத்தில் மற்றொரு பதிவு இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் ”துள்ளிப் பாயும் மாணவரும்....துடிப்பு மிக்க இளைஞர்களும்...அண்ணா..அண்ணா..என்றே பந்தம் பாசம் காட்டும் அன்பகத் தலைவராம் வெற்றிச் சூரியனின் அகவைத் திருநாளில், இனிப்போடும், மகிழ்வோடும் வாழ்த்தி வணங்கி மகிழ்ந்த பொன்னான தருணம்….” என்று குறிப்பிட்டு வேறொரு கத்தியால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேக்கை வெட்டும் படங்களையும் பதிவிட்டுருந்தார். 


முடிவு: 

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜோயல் வாளினை பரிசாக அளித்து இருக்கிறார். அதை கையில் ஏந்திய படத்தை பதிவிட்டும் இருக்கிறார். மற்றொரு பதிவில் வேறொரு கத்தியால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேக்கை வெட்டும் படங்களையும் பதிவிட்டு உள்ளார். ஆனால், வாளால் கேக்கை வெட்டியதாக பாஜகவை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க