YouTurn

டெல்லி ஜூம்மா மசூதி இமாம் அகமத் புகாரி பாஜகவில் இணைந்ததாகப் பரப்பப்படும் பொய் !

டெல்லி ஜூம்மா மசூதி இமாம் அகமத் புகாரி பாஜகவில் இணைந்ததாகப்  பரப்பப்படும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டெல்லி ஷாஹி இமாம் ஜூம்மா மஸ்ஜித் பாஜகவில் இணைந்தார்.



Twitter link | Archive link

விரிவான விளக்கம்

டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் ஜனாப் அகமத் புகாரி பாஜகவில் இணைந்ததாகவும், சனாதன தர்மத்தை இஸ்லாமியர்கள் ஏற்பதாகவும் வீடியோ ஒன்றினை வலதுசாரி சிந்தனையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

https://twitter.com/Krishna73674119/status/1636229604485779459

Archive link 

அதில், இஸ்லாமியர் ஒருவருக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அவர்களுக்குப் பின்னால் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்றும் உள்ளது.



Archive link 

உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இருப்பதைக் காண முடிகிறது. அதனைக் கொண்டு அவரது டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். 

https://twitter.com/drharshvardhan/status/1634441625442172928

Archive link 

2023ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பரவக் கூடிய வீடியோ குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தினை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தூய்மை இந்தியாவின் மூலம் கழிவறை கட்டுவது அனைவருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆரோக்கிய நலனைக் கொண்டு வந்துள்ளது. 

இந்த வரிசையில், இன்று (மார்ச், 11) எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டெல்லி ஜூம்மா மசூதி அருகில் கழிப்பறை அடிக்கல் நாட்டினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/drharshvardhan/status/1634535680230453249

Archive link 

மேற்கொண்டு தேடியதில், ஷாஹி இமாம் பேசக்கூடிய வீடியோவினையும் ஹர்ஷ் வர்தன் பதிவிட்டுள்ளார். அதில், 'இது எனது கடமை ஷாஹி இமாம் புகாரி! ஜூம்மா மசூதி டெல்லி மற்றும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது' எனக் குறிப்பிட்டுள்ளார். 

அவ்வீடியோவில் இமாம் தனது உரையில், உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஜூம்மா மசூதிக்கு வருகை புரிகின்றனர். மசூதியைச் சுற்றி சில அடிப்படை வசதிகள் இல்லை. ஹர்ஷ் வர்தன் அதனை அமைக்க உதவி செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/drharshvardhan/status/1634500238596534272

மேலும், ஹர்ஷ் வர்தன் தான் பேசிய வீடியோவினையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோ ஷாஹி  இமாம் பாஜகவில் இணைந்த வீடியோ அல்ல என்பதை அறிய முடிகிறது. அது டெல்லியில் கழிவறை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்ச்சி. 

மேலும் படிக்க : கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக தவறாக பரப்பிய செல்வ குமார் !

முன்னதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பொய்யான தகவலை பதிவிட்டிருந்தார். அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், டெல்லி ஜூம்மா மசூதியின் ஷாஹி இமாம் பாஜகவில் இணைந்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோ கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா. அந்நிகழ்வில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் டெல்லி ஜூம்மா மசூதியைச் சேர்ந்த ஷாஹி இமாம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க