YouTurn

தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio தற்போதைய திமுக ஆட்சியில் தான் அதிகமானதா? அண்ணாமலை பரப்பும் பொய்!

தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio தற்போதைய திமுக ஆட்சியில் தான் அதிகமானதா? அண்ணாமலை பரப்பும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

2021-22 நிதியாண்டில் அதிமுக ஆட்சியில் 28.3 சதவீதமாக இருந்த Debt-to-GDP ratio, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 26 சதவீதமாக குறைந்து நிலையாக இருக்கிறது.

பரவிய செய்தி

”தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio கடந்த 2011ஆம் ஆண்டில் 16 சதவீதமாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் அது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது” - அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்.


Link

விரிவான விளக்கம்

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி சென்னை ட்வுண் ஹாலில் ’News 18 தமிழ்நாடு’ செய்தித் தொலைக்காட்சி சார்பில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜகவின்  முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் குறித்து பல விஷயங்கள் பேசினார். அவர் பேசும் போது, “தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio கடந்த 2011ஆம் ஆண்டில் 16 சதவீதமாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் அது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி ஏன் கடன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று கேட்டால், திமுகவின் தொழிற்துறை அமைச்சர் ஜப்பானை பாருங்கள், கொரியாவை பாருங்கள் அங்கேயும் கடன்கள் அதிகமாக தான் இருக்கிறது என்கிறார்” என்று கூறினார். 



உண்மை என்ன?


தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். 2026 ஜனவரி மாதம் ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.


அதில், கடந்த 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio 16.5 சதவீதமாக இருந்ததாகவும், பத்தாண்டுகள் கழித்து கடந்த 2021-22 நிதியாண்டில் 28.3 சதவீதமாக இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 26 சதவீதமாக நிலையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png


2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகள் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு மே மாதம் தான் திமுக ஆட்சிக்கு  வந்தது. Debt-to-GDP ratio என்பது மிக அதிகமானதாக இருந்தால், ஒரு அரசு தனது சக்திக்கு மீறி கடன் வாங்குவதாக பொருள்.


மேலும், ஒன்றிய அரசு Fiscal Responsibility and Budget Management (FRBM) என்ற சட்டத்தையும் அதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் Fiscal Responsibility Acts என்ற நிதி பொறுப்பு சட்டங்களையும் இயற்றியுள்ளன. இந்த சட்டங்களின் படி, இந்தியாவின் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிற்கு ஏற்பதான் கடன் பெறமுடியும். மேலும் இந்த FRBM சட்டத்தின் படி, ஒரு மாநிலம் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் இருக்கும் போது அந்த மாநில அரசு ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் கடன் வாங்கமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதிலிருந்து அதிமுக ஆட்சியில் 28.3 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio, திமுக ஆட்சியில் 2 சதவீதம் குறைக்கப்பட்டு 26 சதவீதம் என நிலையானதாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. 


முடிவு:


அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio மிக அதிகமாக இருந்தது என்ற உண்மை தகவலை திரித்து, திமுக ஆட்சியில் தான் அது அதிகமாக இருப்பதாக பொய்யான தகவலை அண்ணாமலை பரப்பி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க