YouTurn

திருப்பதி தரிசனக் கட்டணம், லட்டு விலை குறைக்கப்பட்டுள்ளதாக பரவும் போலித் தகவல்! திருப்பதி தேவஸ்தானத்தின் விளக்கம் இதோ!

திருப்பதி தரிசனக் கட்டணம், லட்டு விலை குறைக்கப்பட்டுள்ளதாக பரவும் போலித் தகவல்! திருப்பதி தேவஸ்தானத்தின் விளக்கம் இதோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திருமலை தரிசன கட்டணம் ரூ300/- லிருந்து 200/- ரூபாயாக குறைப்பு.  50 /- ரூபாயாக இருந்த லட்டு தற்போது 25/- ரூபாயாக குறைப்பு - ஆந்திர பிரதேச அரசாங்கம்.  இங்கேயும் இருக்கே ஒரு களவாணி திருட்டுக் குடும்பக் கட்சி. கோயிலையெல்லாம் இடிச்சித் தள்ளிக்கிட்டு.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முதல்வராக      ஜூன் 13ஆம் தேதியன்று பதவியேற்ற பின், சமீபத்தில் "இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள், திருப்பதி உள்ளிட்ட மத இடங்களை கஞ்சா, மது மற்றும் அசைவ உணவுகளின் மையமாக மாற்றியுள்ளனர். எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து சுத்திகரிப்பு பணி தொடங்கும் என்று அறிவித்தார். 

இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், தரிசனக் கட்டணத்தின் விலை ரூ.300லிருந்து ரூ.200ஆகவும், லட்டு விலை ரூ.50லிருந்து ரூ.25ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றுகூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

மேலும் பரவி வரும் பதிவுகளில், திருப்பதியில் தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு விலை ஆகியவை குறைக்கப்படுகின்றன. ஆனால் இங்கு தமிழ்நாட்டில் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டு பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது. 





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வுசெய்து பார்த்ததில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அறியமுடிந்தது.



திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இதுகுறித்து ஆய்வு செய்தோம். கடந்த ஜூன் 22ஆம் தேதி அன்று, பரவி வரும் செய்திகளின் புகைப்படத்தை குறிப்பிட்டு, "300 ரூபாய் (SED) கட்டண டிக்கெட் மற்றும் லட்டு விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. சமூக ஊடக தளங்களில் பரவி வரும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று பக்தர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.



இதே போன்று TTD News இணையதளத்திலும், திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலின் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ரூ.50 லட்டு பிரசாதத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிசெய்துள்ள TTD, "சமூக வலைதளங்களில் வரும் பொய்யான செய்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.



மேலும் படிக்க: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக நாக பாபு தலைவராக நியமனம் செய்யப்பட்டாரா?

மேலும் படிக்க: ‘திருப்பதி லட்டு செய்யும் காண்ட்ராக்டர்’ எனத் தவறாகப் பரவும் கோல்டன் பாபா சுதிர் குமாரின் புகைப்படம் !

முடிவு:

நம் தேடலில், திருப்பதியில் தரிசன கட்டணம் மற்றும் லட்டு விலை குறைக்கப்பட்டுள்ளதாகப் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் போலியானவை என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பின் மூலம் உறுதிசெய்ய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க