YouTurn

குக் வித் கோமாளி மணிமேகலை மதம் மாறியதாக வதந்தி பரப்பும் வலதுசாரிகள் !

குக் வித் கோமாளி மணிமேகலை மதம் மாறியதாக வதந்தி பரப்பும் வலதுசாரிகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மணிமேகலை... எப்படி ஆரம்பிச்சது எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா லவ் ஜிகாத் மதமேன பிரிந்தது போதும்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹுசேன் எனும் நடனக் கலைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட போது காதலுக்கு மதமில்லை என புகைப்படத்துடன் பதிவிட்ட மணிமேகலை, தற்போது மதம் மாறி உள்ளதாக இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதை மீடியான் இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவண பிரசாத் பாலசுப்ரமணியன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஹுசேன்-மணிமேகலை திருமண புகைப்படத்துடன் கூடிய பதிவு 2017 டிசம்பர் 6ம் தேதி மணிமேகலையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. இருவருக்கும் சென்னை பாரீஸ் கார்னர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் நடைபெற்றதாக மற்றொரு பதிவில் குறிப்பிட்டு உள்ளனர்.



Twitter link | Archive link 



அடுத்ததாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 மே 25ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்புகைப்படத்தை மணிமேகலை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link

2020ல் இந்த புகைப்படத்தை பதிவிட்ட பிறகு மணிமேகலை மதம் மாறி விட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் வெளியாகத் தொடங்கின. அதற்கு மணிமேகலை ட்விட்டர் பக்கத்தில், யாரும் மதம் மாறவில்லை. ஹுசேன் என்னுடன் கோவிலுக்கு வருவார், நாங்கள் ரம்ஜான் கொண்டாடுவோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம் எனப் பதிவிட்டு இருந்தார்.



Twitter link | Archive link 

கடந்த 2 ஆண்டுகளாக இதுபோன்ற பதிவுகளை பார்ப்பதாகவும், இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்ததாகவும் ட்விட்டரில் மணிமேகலை பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link

2023 மார்ச் 6ம் தேதி ஹுசேன் மணிமேகலை தங்களின் புதிய இல்லத்திற்கு பாலக்கால் பூஜை செய்ததாகக் கூறி புகைப்படம் ஒன்றை மணிமேகலை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.



Twitter link 

மேலும் படிக்க : சாவர்க்கரின் சிறை அறை, நேருவின் சிறை வசதி எனப் பரப்பப்படும் தவறான ஒப்பீடு !

இதற்கு முன்பாக, மீடியான் இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவண பிரசாத் பாலசுப்ரமணியன் தனது டிவிட்டர் பக்கத்தில் சாவர்க்கரின் சிறை, நேருவின் சிறை என தவறான ஒப்பீட்டு தகவலை பரப்பியது குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், மணிமேகலை மதம் மாறியதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தியே. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படியொரு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு மணிமேகலையும் மறுப்பு தெரிவித்து பதில் அளித்து இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க