YouTurn

நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பரவும் மூன்றாண்டு முன்பு நடந்த பழைய வீடியோ!

நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பரவும் மூன்றாண்டு முன்பு நடந்த பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

இவ்வளவு தான் இவனுக சமூவநீதி பஸ்லருந்து வெளிய தள்ளும் நீதி

image.png

X link

விரிவான விளக்கம்

திராவிட மாடல் ஆட்சியில் அரசு பேருந்தில் இருந்து மூதாட்டி மற்றும் அவரது உடமைகளையும் பஸ் கண்டெக்டர் கீழே தள்ளி விட்டதாகவும் இதுதான் சமூக நீதியா என்று கூறி, 0:43 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரவி வருகின்றது.

உண்மை என்ன ?


பரவி வரும் வீடியோ குறித்தது தேடிப்பார்த்ததில் இது தற்போது நடந்த சம்பவம் அல்ல என்பதை அறியமுடிந்தது.

 புதியதலைமுறை இணையதளப்பக்கத்தில் கடந்த 2021 டிசம்பர் 10 அன்று "நரிக்குறவர்கள் இறக்கிவிடப்பட்ட விவகாரம்: பேருந்துஓட்டுநர், நடத்துநர் தற்காலிக பணி நீக்கம் என்ற தலைப்பில்", செய்தி வெளியிட்டு இருப்பதை பார்க்க முடிந்தது.


image.png


அச்செய்தியில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக்கவும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.


மேலும், தேடியதில் தந்தி டிவி இணையதளப்பக்கத்தில் 2021 டிசம்பர் செய்தி வெளியிட்டிருப்பதை பார்க்க முடிந்தது.


நரிக்குறவர் குடும்பத்தை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட விவகாரம் தொடர்பாக திருவட்டார் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் நெல்சன் (வயது 45) நடத்துநர் ஜெயதாஸ் (வையது 44) ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலப் பொதுச்செயளாலர் அரவித் உத்தரவிட்டதாக் குறிப்பிட்டிருந்தது.


இதன்மூலம் 2021ல் நடந்த நிகழ்வினை தற்போது நடந்தது போல் சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.


முடிவு :


நம் தேடலில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவத்தை தற்போது நடந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க