யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கால்வாயில் ஆணுறைகள் இருக்கும் வீடியோ 29 மே 2024ல் இருந்தே பரப்பப்பட்டு வருகிறது. மேலும் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பல்வேறு சமூக வலைதளப்பக்கங்களில் இந்த வீடியோ பதிவிட்டு இருப்பதை காணமுடிந்தது.
பரவிய செய்தி
Disturbing reports of used condoms found in drainage near co-living hostels for PG students. it's a reflection of misplaced priorities. Students are sent to study, not to experiment with irresponsibility. Let's not trade ambition for distraction.

விரிவான விளக்கம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முதுகலை மாணவர்களுக்கான co-living விடுதிகளுக்கு அருகிலுள்ள வடிகால் பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் படிக்க அனுப்பப்படுகிறார்கள், பொறுப்பற்ற தன்மையைப் பரிசோதிக்க அல்ல எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Disturbing reports of used condoms found in drainage near co-living hostels for PG students. it's a reflection of misplaced priorities. Students are sent to study, not to experiment with irresponsibility. Let's not trade ambition for distraction.
pic.twitter.com/0spnbgNMDN
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியில் Ranblesta என்ற water mark இருந்ததைக் காணமுடிந்தது. இதையடுத்து அந்த பெயரை சமூக வலைத்தளங்களில் தேடிய போது, rangulesta என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த பக்கத்தில் மே 4ஆம் தேதி பரவி வரும் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும் அதில் #andhrapradesh #telangana #hyderabad #hostel போன்ற hastagகளும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து இந்த காணொளி குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது funi.mind என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு 29 மே 2024 அன்று, "I mean, whose work was it?", என்ற தலைப்பில் பரவி வரும் காணொளி பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
மேலும் இது குறித்துத் தேடுகையில், Yoruba music entertainment and african textiles, charles_general_gh, Akinyinka Abodunrin போன்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளப்பக்கங்களில் பரவி வரும் காணொளி ஜனவரி 15ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.
கால்வாயில் ஆணுறைகள் இருப்பது குறித்த செய்தியை keywords மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது இது குறித்தான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த காணொளி 2024ஆம் ஆண்டு முதலே ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளப்பக்கங்களில் பரவி வருகிறது.
முடிவு :
இறுதியாக நம் தேடலில், ஹைதராபாத்தில் முதுகலை மாணவர்களுக்கான co-living விடுதிகளுக்கு அருகிலுள்ள வடிகாலில் ஆணுறைகள் இருப்பதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானதாகும். மேலும் இந்த காணொளி 2024ஆம் ஆண்டு முதலே பரவி வருகிறது.