YouTurn

1100 என்ற உதவி எண் மூலம் புகார்களை முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

1100 என்ற உதவி எண் மூலம் புகார்களை முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதே தொடங்கப்பட்ட நடைமுறை தான். பின்னர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் போதும் இது தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டது.

பரவிய செய்தி

A Direct Way to Register Public Complaints 

Instagram Link / Archived Link

விரிவான விளக்கம்

தவெக ஆட்சியில் சாதனை! இனி நாம் நமது புகார்களை 1100 என்ற உதவி எண் மூலமும், "CM Helpline" என்ற இணையதளம் மூலமும் முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் எனக் கூறி இணையதளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து keywords மூலம் கூகுளில் தேடினோம். அப்போது times of india ஊடகத்தில், “Tamil Nadu gets centralised toll-free helpline for grievances, 1100” என்ற தலைப்பில் பிப்ரவரி 14, 2021 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது, மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காக '1100' என்ற கட்டணமில்லா எண்ணை ஒதுக்கி, ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர்ப்பு முதலமைச்சர் உதவி எண் மேலாண்மைத் திட்டம் தொடங்கக்கப்பட்டது என்றும், இத்திட்டத்திற்கு ரூ.69.21 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் போதும் இது தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, புதிய தலைமுறை ஊடகத்தில் “'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை: தமிழக அரசு அரசாணை” என்ற தலைப்பில் நவம்பர் 14, 2021 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’ மற்றும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை’ அமைப்பு ஆகியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இனி அவை அனைத்தும் ஒரே துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைக்கு, ‘முதல்வரின் முகவரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம், ஏற்கனவே இருந்த பல புகார் கையாளும் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது.

image.png


முடிவு: 

எனவே, “தவெக ஆட்சியில் சாதனை! இனி நாம் நமது புகார்களை 1100 என்ற உதவி எண் மூலமும், "CM Helpline" என்ற இணையதளம் மூலமும் முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்” எனக் கூறி பரப்பப்படும் செய்திகள் தவறானவை. இது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதே தொடங்கப்பட்ட நடைமுறை தான்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க