யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2014 ஆம் ஆண்டில், செங்கடலில் 332.35 மீட்டர் ஆழத்தை எட்டி, திறந்த நீரில் ஆழமான ஸ்கூபா டைவ் செய்து, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த அசாதாரண சாதனையை இது வரை யாரும் முறியடிக்கவில்லை. தற்போதைய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மனித உடலியல் திறன்களை கொண்டு பார்க்கையில், 600 மீட்டருக்கு மேல் கடலுக்கடியில் டைவிங் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
புதுச்சேரியில் 8 கி.மீ. வரை ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை ஏந்திய கல்லூரி மாணவர் என்று கூறி கலாட்டா, ‘The Federal’, நியூஸ் தமிழ் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
8 கி.மீ. வரை ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை ஏந்திய கல்லூரி மாணவர். pic.twitter.com/Jaqp4HMXd2
உண்மை என்ன?
உண்மையிலேயே த.வெ.கவின் கொடியை ஆழ்கடலிலுக்கு கொண்டு சென்றார்களா என்பது குறித்து தேடி பார்த்தில், டிசம்பர் 21, 2024 அன்று இதே போன்று த.வெ.க கொடியை கடலுக்குள் கொண்ட சென்ற வீடியோ ஒன்றை பார்க்கமுடிந்தது. ஆனால் இதற்கும், தற்போது பரவி வரும் வீடியோவிற்கும் எந்த தொடர்புமில்லை.
மேலும் இது குறித்து தேடி பார்த்தப் போது, ஜூலை 21, 2025 அன்று மாலை மலர் ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார் என்று தற்போது மாற்றியிருக்கின்றனர். ஆனால் மற்ற ஊடகங்கள் ஆழம் என்று நினைத்து, ஆழ்கடலுக்குள்ளே 8 கி.மீ என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து இதுவரை அதிகப்பட்சமாக ஆழ்கடலுக்குள் சென்றது குறித்து தேடி பார்த்தோம். அப்போது guinnessworldrecords .com என்ற இணையதளப்பக்கத்தில், "Ahmed Gabr breaks record for deepest SCUBA dive at more than 1,000 feet" என்ற தலைப்பில் செப்டம்பர் 22,2014 அன்று வெளியான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் எகிப்து நாட்டை சேர்ந்த 41 வயதான அகமது என்ற நபர், செங்கடலில் 332.35 மீட்டர் ஆழத்தை எட்டி, திறந்த நீரில் ஆழமான ஸ்கூபா டைவ் செய்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் guinnessworldrecords .com பக்கத்தில், "Guinness World Records concludes review into deepest scuba dive (male) record" என்ற தலைப்பில் இது குறித்து மீண்டும் ஒரு செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் அகமதின் உலக சாதனையை மதிப்பாய்வு செய்யப்பட்து. மேலும் பல மாதங்களாக நடைபெற்ற மதிப்பாய்வில், தவறான விளையாட்டை நிறுவும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே அகமத் காப்ர் 332.35 மீட்டர் ஆழ்கடலுக்கு சென்றதை தொடர்ந்து அங்கீகரிக்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து எவ்வளவு தூரம் மனிதன் ஆழ்கடலுக்கு செல்லமுடியும் என்பது குறித்து தேடினோம். அப்போது ABYSS SCUBA DIVING இணையதளப்பக்கத்தில், "How Deep Can You Dive?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் மனிதர்களால் 600 மீட்டர் உயரத்திற்கு டைவ் செய்ய முடியுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போதைய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மனித உடலியல் திறன்களை கொண்டு பார்க்கையில், 600 மீட்டருக்கு மேல் கடலுக்கடியில் டைவிங் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று பதிலளிக்கப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது.

முடிவு:
நம் தேடலில், 332.35 மீட்டர் ஆழ்கடலுக்கு சென்றதே உலக சாதனையாக கருதப்பட்டுள்ளதை பார்க்கமுடிந்தது. எனவே 8 கி.மீ. வரை ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை ஏந்திய கல்லூரி மாணவர் என்று கூறி கலாட்டா, ‘The Federal’ மற்றும் நியூஸ் தமிழ் போன்ற ஊடகங்கள் தங்கள் பக்கங்களில் ஆதாரப்பூர்வமற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.
