YouTurn

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேசியக் கொடியை ஏற்றிய கலெக்டர் எனப் பரவும் ஜம்மு காஷ்மீர் வீடியோ !

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேசியக் கொடியை ஏற்றிய கலெக்டர் எனப் பரவும் ஜம்மு காஷ்மீர் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

கவனமாக இரு. இந்துக்களின் ஒரு தவறான வாக்கு இந்தியாவை நமது தேசத்தின் இஸ்லாமியமயமாக்கலை நோக்கி தள்ளும். ஏற்கனவே கர்நாடகாவில் நடக்கிறது. த்வஜ வந்தனாவின் போது பர்காவில் பெண் கலெக்டர். பரேட் பரிசோதனையின் போது கூட அவள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஐ பார்க்க. பிரான்சில் இப்படிதான் தொடங்கியது..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு கலெக்டர் ஒருவர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலது சாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவில் அந்தப் பெண் ஹிஜாப் அணிந்து அணிவகுப்பு வண்டியில் செல்வதையும் காண முடிந்தது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது.

பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதி Fast News ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், "சுதந்திர தினம் 2023: ஒரே துணைத் தலைவரான சைமா பர்வீன், கிஷ்த்வார் சௌகான் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். மேலும் வரலாற்றில் முதல் முறையாக கிஷ்த்வாரின் துணைத் தலைவர் சைமா பர்வீன் லோன் பொது மக்களிடம் ஹிஜாப் அணிந்து உரையாற்றினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இந்த வீடியோ ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதையும், அங்குள்ள சௌகான் மைதானத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் துணைத் தலைவர் சைமா பர்வீன் லோன் மற்றும் எஸ்.எஸ்.பி கலீல் அகமது போஸ்வால் ஆகியோர் முன்னிலையில் சுதந்திர தின விழாவின் அணிவகுப்பு நடைபெற்றது என்பதையும் Greater kashmir வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் அறிய முடிந்தது. 



இது குறித்த செய்திகளையும், விழாவின் புகைப்படத் தொகுப்புகளையும் District Administration Kishtwar என்ற அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் காண முடிந்தது.




மேலும் படிக்க:  கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக கோஷமிட்ட முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !


மேலும் படிக்க: இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !



முடிவு:


நம் தேடலில், கர்நாடகாவில் சுதந்திர தினத்தன்று ஹிஜாப் அணிந்து தேசியக் கொடியை ஏற்றிய கலெக்டர் எனப் பரவும் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டதல்ல. இது ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் துணைத் தலைவரான சைமா பர்வீன் லோன் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க