YouTurn

இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்று பொய் பரப்பும் தமிழ்நாடு முதல்வர் விஜய்!

இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்று பொய் பரப்பும் தமிழ்நாடு முதல்வர் விஜய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1990-ஆம் ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் நாட்டிலேயே இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் அடைந்தார்.

பரவிய செய்தி

இலவச மின்சாரம் தி.மு.க. கொடுத்தது இல்லை  - முதலமைச்சர் விஜய் 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், 100யூனிட் இலவச மின்சாரம் திமுக கொடுத்தது இல்லை என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தது என்றும் பேசியிருந்தார். 


உண்மை என்ன? 

முதல்வர் விஜய் பேசிய இந்த கருத்து குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது The Hindu ஊடகத்தின் இணையதளப்பக்கத்தில் “Free power for ryots to continue: Karunanidhi” என்ற தலைப்பில் செப்டெம்பர் 16, 2010 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் 1990-ஆம் ஆண்டிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு திகழ்ந்ததாகவும், அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கருணாநிதி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து விகடன் ஊடக்கத்திலும், ஆகஸ்ட் 08, 2018 அன்று “1957 முதல் 2018 வரை... கருணாநிதி விவசாயத்துக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி 1990-ம் ஆண்டு பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசம் என அறிவித்தார். இதனால் பலன் அடைந்த விவசாயிகளின் அப்போதைய எண்ணிக்கை 16 லட்சம். இந்தியாவிலேயே முதன்முதலாகக் விவசாயிகளுக்காக ‘மின்சாரம் இலவசம்’ என்று கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் அது என்று கூறப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1990-ஆம் ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில்  இலவச மின்சாரம் அறிவித்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்று கூறி தமிழ்நாடு முதல்வர் விஜய் தவறான தகவலைப் பரப்பி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க