YouTurn

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறுகையில் முதல்வர் சிங்கப்பூர் செல்வதாகப் பரவும் பழைய செய்தி !

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறுகையில் முதல்வர் சிங்கப்பூர் செல்வதாகப் பரவும் பழைய செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஊரே பஸ் ஸ்ரைக்கினால் ஸ்தம்பித்து கிடக்கிறது! எது நடந்தால் எனக்கென்ன என்று இன்ப சுற்றுலா செல்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சிங்கப்பூருக்கு பயணம் செய்ய உள்ளார் என்று கூறி, நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோ கடந்த 2023 மே 22 அன்று பிற்பகல் 12:03 மணியளவில் News18 Tamil Nadu ஊடகத்தின் தொலைக்காட்சி சேனல் மற்றும் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தி என்பதை அறிய முடிந்தது.



மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கபூர் பயணம் குறித்து ஏதாவது செய்தி வெளியிட்டுள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2023-ல் அவர் வெளியிட்டுள்ள செய்திகளை மட்டுமே காண முடிந்தது.



மேற்கொண்டு தேடுகையில், தமிழ்நாடு முதல்வர் ஜனவரி 28ம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



மேலும் படிக்க: தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என ராஜீவ் காந்தி கூறியதாக சவுக்கு சங்கர் பகிர்ந்த எடிட் செய்த படம்!

மேலும் படிக்க: ஸ்டாலின் சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

முடிவு :

நம் தேடலில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம் எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இது 2023 மே 22 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தால் வெளியிடப்பட்ட பழைய செய்தி என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க