YouTurn

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள முழு வீடியோவில், “எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்திறனுக்கு சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி பல எடுத்துக்காட்டுக்கள் இருந்தாலும், தற்போது புதிதாக ஒரு எடுத்துக்காட்டு வந்துள்ளது” என்றே பேசியுள்ளார்.

பரவிய செய்தி

Reels போடாம ஒழுங்கா படிங்க ஸ்டாலின் BA மேல ஒரு கோடு 

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

தி.மு.க தலைமையிலான மதச்சார்ப்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். முதல் பிரசாரத்தை அவரது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்கினார். 

அப்போது அங்கு கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாக முதலமைச்சர் கூறியதாக வீடியோ கிள்ப் ஒன்றை பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

முதலில் திருவாரூரில் முதலமைச்சர் பேசிய வீடியோ குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது Sun News ஊடகத்தில் “எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்திறனுக்கு புதுசா ஒரு எடுத்துக்காட்டு வந்திருக்கு... - முதலமைச்சர் ஸ்டாலின்” என்று குறிப்பிட்டு, அவர் திருவாரூரில் பேசிய செய்தியை வெளியிட்டுருந்தனர். அதை பார்த்த போது, “எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்திறனுக்கு சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி பல எடுத்துக்காட்டுக்கள் இருந்தாலும், தற்போது புதிதாக ஒரு எடுத்துக்காட்டு வந்துள்ளது” என்றே பேசியுள்ளார். 


இது குறித்து மேலும் பார்த்த போது, தினகரன் ஊடகத்தில் முதலமைச்சர் பேசியது செய்தியாக வெளியாகியிருந்தது. அதில் “பழனிசாமி அவர்களின் அறிவுத்திறத்திற்கு, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி, பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், இப்போது புதிதாக ஒரு எடுத்துக்காட்டு வந்திருக்கிறது. அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது, தொலைநோக்கு பார்வையும் இல்லை என்பதை தன்னுடைய உளறல்களால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரின் உளறல்களிலேயே ஹைலைட் எது தெரியுமா? எப்படி உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டால், வரியை உயர்த்தி நிறைவேற்றுவோம் என்று சொல்கிறார்.” என்று தான் முதல்வர் கூறியிருக்கிறார். 


முடிவு: 

நம் தேடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள முழு வீடியோவில், “எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்திறனுக்கு சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி பல எடுத்துக்காட்டுக்கள் இருந்தாலும், தற்போது புதிதாக ஒரு எடுத்துக்காட்டு வந்துள்ளது” என்றே பேசியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முதல்வர் பேசியுள்ள வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க