யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வர் ஸ்டாலின் தஞ்சைக்கு பொது நிகழ்ச்சிக்காக செல்லவில்லை. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமணம் மார்ச் 5ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்றது. அதற்காக தான் முதல்வர் ஸ்டானிலும் துணை முதல்வர் உதயநிதியும் தஞ்சை சென்றிருக்கிறார்கள்.
பரவிய செய்தி
நேற்று தஞ்சையில் விஜய் மக்கள் சந்திப்பு!
இன்று தஞ்சையில் ஸ்டாலின்!
புரிந்தது!
உங்களுடன் ஸ்டாலின்
விஜய் பின்னால் ஃபேன் ஸ்டாலின்

விரிவான விளக்கம்
இந்த வருடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தஞ்சாவூரில் மார்ச் 04 அன்று தவெக சார்ப்பில் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் விஜய்க்கு போட்டியாக தஞ்சையில் கூட்டம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்றதாக வீடியோ ஒன்றை தவெக தரப்பில் பரப்பி வருகின்றனர்.
நேற்று தஞ்சையில் விஜய் மக்கள் சந்திப்பு!
இன்று தஞ்சையில் ஸ்டாலின்!
புரிந்தது!😂
உங்களுடன் ஸ்டாலின்❌
விஜய் பின்னால் ஃபேன் ஸ்டாலின்✅pic.twitter.com/93YVQD2JJG
உண்மை என்ன?
உலகமே விஜயை தான் சுற்றி வருவதாக தவெக அபிமானிகள் நினைக்கிறார்கள். அந்த வகையில் தான் முதலமைச்சர் தஞ்சை வந்ததையும் விஜய்க்கு போட்டி என்று பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து கூகுளில் keywords மூலம் தேடினோம். அப்போது ”தஞ்சைக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை- டிரோன்கள் பறக்க தடை” என்ற தலைப்பில் மார்ச் 04, 2026 அன்று மாலைமலர் ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

அதில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சகோதரி மகள் திருமணம் மார்ச், 05 அன்று தஞ்சாவூர் மகாராஜா மகாலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மார்ச், 05 அன்று காலை 9 மணிக்கு தஞ்சாவூருக்கு வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, கலைஞர் டிவி ஊடகத்தில் மார்ச், 05 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 05-03-2026 தஞ்சாவூரில் நடைபெற்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, முதல்வர் ஸ்டாலின் தஞ்சைக்கு பொது நிகழ்ச்சிக்காக செல்லவில்லை. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமணம் விழாவுக்காக சென்றிருந்தார். இதை விஜய்க்கு போட்டியாக கூட்டம் நடத்தி தனது செல்வாக்கை நிரூபிக்க சென்றதாக தவெக ஆதரவாளர்கள் தவறாகப் பரப்பி வருகிறார்கள்.