யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கருணாநிதி அவர்களின் நினைவு நாளின் போது முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் போதும் காலில் Shoe-வுடனேயே இருக்கிறார். இந்நிலையில் தவறான தகவலைத் திரித்துப் பரப்பி வருகின்றனர். மேலும் அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தின் அருகில் ஸ்டாலின் இருப்பது போன்று பரவும் புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
Day 1 of spoiling DMK votes till the elections :
I just showed this pic to 30+ of my friends (all VCK supporters & Ambedkar admirers who usually vote DMK+).
I explained how TVK has actually embraced Ambedkarism and why they are the better option and now they've fully shifted to TVK.

விரிவான விளக்கம்
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் காலில் Shoe-உடன் இருப்பதாகவும், அதே சமயம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது மட்டும் காலில் Shoe இல்லாமல், வெறுங்காலுடன் மரியாதை செலுத்துவதாகவும் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Day 1 of spoiling DMK votes till the elections :
I just showed this pic to 30+ of my friends (all VCK supporters & Ambedkar admirers who usually vote DMK+).
I explained how TVK has actually embraced Ambedkarism and why they are the better option and now they've fully shifted… pic.twitter.com/QkC2TnuVCy
உண்மை என்ன?
இந்த வருடம் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது News Tamil 24X7 ஊடகத்தில் ”டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்.. முதலமைச்சர் மரியாதை” என்ற தலைப்பில் ஏப்ரல் 14, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் முதலமைச்சர் T shrit அணிந்திருந்ததை பார்க்கமுடிந்த்து. இதிலிருந்து பரவி வருவது இந்த வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பரவி புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Office of Udhayanidhi Stalin எக்ஸ் பக்கத்தில், அந்த புகைப்படம் ஏப்ரல் 14, 2025 அன்று பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தின் அருகில் ஸ்டாலின் இருப்பது போன்று பரவும் புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
சட்டமேதை அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு துணை முதலமைச்சர்… pic.twitter.com/t59ApRdQqL
மேலும் கருணாநிதியின் நினைவு நாளின் போது முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்திய வீடியோ கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது சன் நியூஸ் ஊடகத்தில், ஆகஸ்ட் 07, 2024 அன்று கலைஞரின் நினைவு நாளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்திய செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் போதும் காலில் Shoe-வுடனேயே இருப்பதை தெளியாக பார்க்கமுடிந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் காலில் Shoe-உடன் இருப்பதாகவும், அதே சமயம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது மட்டும் காலில் Shoe இல்லாமல், வெறுங்காலுடன் மரியாதை செலுத்துவதாகவும் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.