யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொளத்தூர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அங்கே நடந்த தீ விபத்திற்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கட்சி சார்பாக வழங்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அரசு ஏன் புது வாகனம் வாங்கி தரணும் தனியார் உடற்பயிற்சி கூடம் இன்சூரன்ஸ் பண்ணியிருக்குமே... மக்கள் வரிப்பணத்தை எப்படி எல்லாம் கரியாக்குகிறீர்கள்... இதுக்கு பொம்மை மாடலா

விரிவான விளக்கம்
சென்னை கொளத்தூரில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீயிக்கு இரையாகின. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருசக்கர வாகனங்களில் வழங்கினார். இந்நிலையில் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக புதிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுவதாக எக்ஸ் பக்கத்தில் பரவி வருகிறது.
தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அரசு ஏன் புது வாகனம் வாங்கி தரணும் 🤦🏼 தனியார் உடற்பயிற்சி கூடம் இன்சூரன்ஸ் பண்ணியிருக்குமே... மக்கள் வரிப்பணத்தை எப்படி எல்லாம் கரியாக்குகிறீர்கள்... இதுக்கு பொம்மை மாடலா 🤦🏼 https://t.co/oJ0K8IezNP
உண்மை என்ன?
முதலில் இது குறித்து ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மாறாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தனியார் ஜிம் தீ விபத்து ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களை சந்தித்து, புதிய இருசக்கர வாகனங்களை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் இன்று (05.08.2025), கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, வார்டு 69, மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட நான்கு தளங்கள் கொண்ட வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்து, (1/5) pic.twitter.com/YI2u0aIXVp
அந்த புகைப்படங்களில் திமுகவின் கட்சி கொடிகள் இடம்பெற்றிருப்பதை காணமுடிந்தது. அரசு நடத்தும் விழாக்களில் எந்த கட்சி கொடியும் இடம்பெற்றிருக்கக் கூடாது. எனவே இது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடிந்தது. கொளத்தூர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அங்கே நடந்த தீ விபத்திற்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கட்சி சார்பாக வழங்கப்பட்டதாகும்.
60 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.
தொடர்ந்து, சட்டமன்ற அலுவலகத்தில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனியார் ஜிம் தீ விபத்து ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களை சந்தித்து, மற்றும் இவர்களின் இரண்டு சக்கர வாகனம் முழுமையாக தீ விபத்தில் சேதம் அடைந்து விட்டதால் (2/5) pic.twitter.com/jgUkRlLaLt
இது குறித்து பதிவை அமைச்சர் கே.என்.நேருவின் எக்ஸ் பக்கத்திலும் பார்க்கமுடிந்தது. அதில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்களிலும், திமுக கொடிகள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கும் புதிய இருசக்கர வாகனங்களை நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்… pic.twitter.com/oKLc3Ey3oD
முடிவு:
எனவே, கொளத்தூர் பகுதியில் தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக திமுக கட்சி சார்பாக மூன்று நபர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படவில்லை. இதனை திரித்து தவறாக பரப்புகின்றனர்.