YouTurn

திமுக தொண்டரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைந்ததாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

திமுக தொண்டரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைந்ததாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய வந்த ஒருவரை, பவுன்சர் தடுக்க முயல்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை திமுக தொண்டரை முதல்வர் அறைந்ததாகக் கூறி தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

When his cheerleaders are talking about equality,

DMK leader Stalin slapped a party worker Today.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், அங்கு வந்திருந்த தொண்டரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைந்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோ குறித்து ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது இது தொடர்பான எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 


இதையடுத்து பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது டிசம்பர் 20, 2025 அன்று, 

Thinakaran Rajamani என்ற எக்ஸ் பக்கத்தில் திருநெல்வேலியில் மறைந்த பாளையங்கோட்டை ஒன்றியத் தலைவர் தங்கபாண்டியனின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் என்று குறிப்பிடப்பட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது. 


அந்த வீடியோவை கூர்ந்து கவனிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய தொண்டர் ஒருவர் வருகிறார். அப்போது அவரை பவுன்சர் தடுக்க முயலும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதை திமுக தொண்டரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர்.


முடிவு: 

எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய வந்த ஒருவரை, பவுன்சர் தடுக்க முயல்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை திமுக தொண்டரை முதல்வர் அறைந்ததாகக் கூறி தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க