YouTurn

குஜராத்தில் “Floating Solar Plant” என்று பரவும் சீனா வீடியோ!

குஜராத்தில் “Floating Solar Plant” என்று பரவும் சீனா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது. இதை குஜராத்தில் பாஜக அரசு ஏற்படுத்தி இருக்கும் “Floating Solar Plant” என்று கூறி பலரும் தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

வளர்ச்சி நோக்கி குஜராத் மாடல்!! குஜராத்தில் பாஜக அரசு ஏற்ப்படுத்தி இருக்கும் Floating Solar plant...!! வருடம் தோறும் மின் கட்டணத்தை உயர்த்தினால் அது திராவிட மாடல்..!

X Link | Archived Link

விரிவான விளக்கம்

வளர்ச்சி பாதையில் குஜராத் மாடல் என்றும், குஜராத்தில் பாஜக அரசு ஏற்படுத்தியிருக்கும் Floating Solar plant என்றும் 19 விநாடி கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், மாவோ நிங் பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் ஜூலை 3ஆம் தேதி, நகர மின் கட்டமைப்புகள் முதல் கடலோர நீர்நிலைகள் வரை, பசுமையான எதிர்காலத்திற்கு மின்சாரம் வழங்க சீனா சூரியனைப் பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தார். 


இது குறித்து மேலும் தேடி பார்த்ததில், China Youth Daily ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 7ஆம் தேதி இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் சீனா சூரிய தயாரிப்புகளை வழங்கி, உலகளாவிய பசுமை மாற்றத்திற்கு உத்வேகம் அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போல் சீன இணையதளப்பக்கமான xoox .co .ilவில், சீனாவில் 80 கி.மீ. தொலைவில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் வான்வழி காட்சி, இது குறித்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. 


மேலும் maoning_mfa, FacByte போன்ற சமூக ஊடகப்பக்கங்களிலும், பரவி வரும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு : 

நம் ஆய்வில், பரவி வரும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது உறுதியானது.  இதை குஜராத்தில் பாஜக அரசு ஏற்படுத்தி இருக்கும் “Floating Solar Plant” என்று கூறி பலரும் தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க