யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திராவிடமாடல் ஆட்சியில் உடைந்த ஸ்டேரிங்குடன் பேருந்து இயக்கப்படுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை. பரவி வரும் புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது.
பரவிய செய்தி
இது தான் திராவிட மாடல் பஸ் டிரைவர் பாவம் ஸ்டீயரிங் ஒடிந்தாலும் அவர் தன் கடமை உணர்வுடன் பணியாற்றுகிறார் வாழ்த்துக்கள்

விரிவான விளக்கம்
திராவிடமாடல் ஆட்சியில் உடைந்த ஸ்டேரிங்குடன் பேருந்து இயக்கப்படுவதாகப் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். Joe monster என்ற இணையதளப்பக்கத்தில் ”Crazy bus driver” என்று குறிப்பிட்டு அக்டோபர் 21, 2009 அன்றே இது தொடர்பான பல புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது காணமுடிந்தது. அதில் இது போன்ற சூழ்நிலையில் பேருந்தை நிறுத்துவது தான் பொது அறிவு. ஆனால் சீனால் அப்படியில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, கிரீஸ் நாட்டில் ஊடகமான Protothema ஊடகத்தில் “Phew... we escaped” என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படத்துடன் ஆகஸ்ட் 23, 2011 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் உலகின் மிக மோசமான ஓட்டுநர்கள் கிரீஸில்தான் இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். குறிப்பாக சீனாவுக்கு, ஷாங்காய்க்குச் செல்லும் வரை. 15 நிமிட டாக்சி பயணத்தில், நாங்கள் கிட்டத்தட்ட 15 முறை விபத்தில் சிக்கவிருந்தோம், மேலும் 30 பாதசாரிகள் மீது மோதவிருந்தோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Forums Bharat rakshak என்ற இணையதளப்பக்கத்திலும், 22 டிசம்பர் 2012 அன்று சீனாவில் எடுக்கப்பட்டது என்று பரவி வரும் புகைப்படம் பதிவாகியிருந்தது பார்க்கமுடிந்தது.

முடிவு:
எனவே, பரவி வரும் புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இதை திராவிடமாடல் ஆட்சியில் உடைந்த ஸ்டேரிங்குடன் பேருந்து இயக்கப்படுவதாக தவறான செய்தியை பரப்பி வருகிறனர்.