YouTurn

வயநாடு நிலச்சரிவு சிசிடிவி காட்சி எனப் பரவும் சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ!

வயநாடு நிலச்சரிவு சிசிடிவி காட்சி எனப் பரவும் சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு ஒரு சிசிடிவி-யில் பதிவாகியுள்ளதாகப் பரவும் வீடியோ சீனாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

நினைத்து பார்க்கவே முடியாத ஆபத்தில் வயநாடு. நமக்கும் இது ஒரு பாடம்..

X link

விரிவான விளக்கம்

கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், அது வயநாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை அறிய முடிந்தது.

இந்த வீடியோவில் இடதுபக்கம் மேல் ஓரத்தில் ‘16.06.2024’ என்ற தேதி உள்ளது. ஆனால், வயநாட்டில் நிலச்சரிவு ஜூலை, 30ஆம் தேதிதான் ஏற்பட்டது. இதே வீடியோ கடந்த ஜூன் 30ஆம் தேதி Bacot (@bacotwarga) என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் சீனாவின் Meizu என்ற பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு இதுதொடர்பாகத் தேடியதில், இதே வீடியோ ‘Dailymotion’ என்ற தளத்திலும் கடந்த ஜூன் 28ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் இச்சம்பவம் சீனாவில் நடந்ததாகத்தான் உள்ளது. ‘VK’ என்ற தளத்திலும் இதே தகவலைக் காணமுடிகிறது.

இவற்றிலிருந்து இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. ஆனால், இதனை வயநாடு எனத் சமூக வலைத்தளத்தில் தவறாகப் பரப்புகின்றனர்.

முடிவு: 

வயநாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என சமூக வலைத்தளத்தில் பரவும் சிசிடிவி காட்சி சீனாவில் கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்டது.



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.