யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
எங்க நடந்துசுன்னு தெரியல... விடியா திமுக மாடல் அரசு ஆளும் தமிழ்நாட்டு தான் யாருக்குமே பாதுகாப்பில்லாத தமிழ்நாடு.
X post link | Archive link

X post link | Archive link
விரிவான விளக்கம்
திமுக ஆட்சியில் போக்குவரத்து காவலரை சிலர் சேர்ந்து மடக்கி பிடித்து தாக்குவது போன்ற 1.42 நிமிட வீடியோ ஒன்றை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவின் பதிவில், இது எங்க நடந்தது என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

உண்மை என்ன ?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் கடந்த 2018 மார்ச் மாதம் 22-ஆம் தேதி அன்று Newsglitz tamil யூடியூப் பக்கத்தில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், காசு கேட்ட போலீசை விரட்டிய மக்கள் என்று தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2018-ல் வெளியான நக்கீரன் செய்தியில், 'சென்னை வேளச்சேரியில் 100 அடி சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை ஈடுபட்டு உள்ளனர். அப்போது அந்த சாலை வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் தர மறுத்த வாகன ஓட்டியை தாக்கி உள்ளனர் போக்குவரத்து காவல் அதிகாரிகள். அதனை பார்த்த சக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் சேர்ந்து போக்குவரத்து காவல் அதிகாரிகளை முற்றுகையிட்டு மடக்கி பிடித்து வீடியோ எடுக்க முயற்சி செய்தனர் ' என கூறப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அது 2018ல் எடுக்கப்பட்ட வீடியோ. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது என்பதை அறிய முடிகிறது.
எங்க நடந்துச்சு ன்னு தெரியல... #விடியா_திமுகமாடல் அரசு ஆளும் தமிழ்நாடு தான்
யாருக்குமே #பாதுகாப்பில்லாத_தமிழ்நாடு pic.twitter.com/vgYsIdaoUT
— Kovilambakkam Karthik (@AdmkKarthik07) November 22, 2023