யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் பேசியுள்ள முழு வீடியோவில், “கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை. அது தலித்துகளால் எப்படி வருது என்றால், ஆர் எஸ் எஸ் காரர்களால் தான். நான் அந்த பகுதியைச் சேர்ந்தவன். ஒரு மாசத்து ஒருத்தர் வந்துடுவாங்க. காட்டுமன்னார் கோவிலில் இஸ்லாமியர்கள் தான் வியாபரத்தில் இருப்பார்கள். ஆர் எஸ் எஸ் காசு குடுத்து ஏதாவது பிரச்சனை பண்ணுனு சொல்வாங்க. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தான், இஸ்லாமியர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் அவர்களை பாதுகாப்பது நம் கடமை என்று இரண்டு சமூகத்தையும் ஒன்றிணைத்து இருக்கிறார்” என்றே பேசியிருப்பார்.
பரவிய செய்தி
"இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை" என பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் சர்ச்சை பேச்சு

விரிவான விளக்கம்
"இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை" என பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் கூறியதாக சாணக்கியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் பேசிய முழு வீடியோவை தேடினோம். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின் பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் ஏப்ரல் 05, 2026 அன்று விசிக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் பேசியுள்ள முழு லைவ் வீடியோ இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சரியாக 24:49 நிமிடத்தில் அவர் பேசிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
அதில் பேசியுள்ள அவர், “கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை. அது தலித்துகளால் எப்படி வருது என்றால், ஆர் எஸ் எஸ் காரர்களால் தான். நான் அந்த பகுதியைச் சேர்ந்தவன். ஒரு மாசத்து ஒருத்தர் வந்துடுவாங்க. காட்டுமன்னார் கோவிலில் இஸ்லாமியர்கள் தான் வியாபரத்தில் இருப்பார்கள். ஆர் எஸ் எஸ் காசு குடுத்து ஏதாவது பிரச்சனை பண்ணுனு சொல்வாங்க. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தான், இஸ்லாமியர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் அவர்களை பாதுகாப்பது நம் கடமை என்று இரண்டு சமூகத்தையும் ஒன்றிணைத்து இருக்கிறார்” என்றே பேசியிருப்பார்.
இந்நிலையில் அவர் பேசிய வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வண்ணம் சாணக்கியா ஊடகம் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு:
"இஸ்லாமியர்களுக்கு தலித்துகளால் தான் பிரச்சனை" என பண்ருட்டி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமான் பேசியுள்ளதாக சாணக்கியா ஊடகம் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது.