
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும் இதை NDTV, டைம்ஸ் நவுவ் , இந்தியா டுடே, மணிகண்ட்ரோல் (MoneyControl), டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18, மற்றும் டெக்கான் ஹெரால்ட் (Deccan Herald) போன்ற ஆங்கில ஊடகங்களும், தமிழில் தந்தி டிவியும் செய்தியாக வெளியிட்டிருந்தனர்.

9th class textbooks nowadays pic.twitter.com/WcllP4vMn3
— khushi (@nashpateee) January 30, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் இது சிபிஎஸ்சி பாடப்புத்தகம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் இத்தகைய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சிபிஎஸ்சி, தனது எக்ஸ் பக்கத்திலும் டேட்டிங் மற்றும் ரிலேஷன்ஷிப்ஸ் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டதாக பரவும் செய்திகள் குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், "ஊடகத்தின் ஒரு பகுதியானது, டேட்டிங் மற்றும் ரிலேஷன்ஷிப்ஸ் குறித்த பாடங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை CBSE வெளியிட்டதாக தவறாகக் கூறுகிறது. இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அத்தியாயத்தின் உள்ளடக்கங்கள், ஜி.ராம் புக்ஸ்(பி) லிமிடெட் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட, ககன் தீப் கவுர் என்பவர் எழுதிய "A Guide to Self Awareness and Empowerment" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. சிபிஎஸ்இ இது போன்ற எந்த புத்தகத்தையும் வெளியிடுவதுமில்லை, இது போன்ற எந்தவொரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் பரிந்துரைப்பதுமில்லை." என்று அதில் கூறியுள்ளது.
Clarification pic.twitter.com/hNbZdbM5P8
— CBSE HQ (@cbseindia29) February 2, 2024
இதே போன்று, ஜி.ராம் புக்ஸ்(பி) லிமிடெட் பதிப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜி. ராம் புக்ஸ் (பி.) லிமிடெட் சார்பாக, எங்களின் புத்தகமான 'A Guide to Self Awareness and Empowerment' என்ற புத்தகத்திலிருந்து 'டேட்டிங் & ரிலேஷன்ஷிப்ஸ்' என்ற தலைப்பில் உள்ள அத்தியாயத்திற்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்துள்ளன. இந்த புத்தகங்கள் CBSE அல்லது NCERT ஆல் வெளியிடப்படவில்லை என்பதை மேலும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.
We are grateful for the positive response that our chapter on Dating & Relationships has garnered on social media.
We hope to continue creating more revolutionary educational content for the promotion of positive mental health of students, thoughtfully and responsibly. pic.twitter.com/R4SB4xEvrz
— G. Ram Books (@grambooksind) February 2, 2024
மேலும் படிக்க: சவுதி அரேபியா பள்ளி பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட்டதாகப் பரவும் பொய் !
முடிவு:
நம் தேடலில், சிபிஎஸ்சி 9-ம் வகுப்பு புத்தகத்தில் டேட்டிங், ரிலேஷன்ஷிப்ஸ் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இது தனியார் பதிப்பகமான ஜி.ராம் புக்ஸ்(பி) லிமிடெட் மூலம் வெளியிடப்பட்ட புத்தகம் என்பதையும் அறிய முடிகிறது.