YouTurn

கார் திருடனை பாஜக கட்சியில் சேர்த்ததாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பகிர்ந்த போலி நியூஸ் கார்டு !

கார் திருடனை பாஜக கட்சியில் சேர்த்ததாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பகிர்ந்த போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திருடர்களைப் பிடிக்கும் பாஜக சென்னையை சேர்ந்த பிரபல கார் திருடன் ஜானிபாய் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தான்

Facebook link

விரிவான விளக்கம்

மிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தங்களது பேஸ்புக் பக்கத்தில் ’நியூஸ் தமிழ்’ பெயரில் ஒரு நியூஸ் கார்டினை பதிவிட்டுள்ளது. அதில், சென்னையைச் சேர்ந்த பிரபல கார் திருடனான ஜானிபாயை பாஜக-வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இந்த நியூஸ் கார்டினை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன?

பரவக் கூடிய நியூஸ் கார்டில் ‘நியூஸ் தமிழ்’ என்கிற பெயரும் ‘10.02.2024’ தேதியும் இருப்பதைத் தொடர்ந்து அவர்களது சமூக வலைத்தள பக்கங்களை ஆய்வு செய்தோம். நியூஸ் தமிழ்நாடு அப்படி எந்த கார்டையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. 

நியூஸ் தமிழ் பதிவிட்டுள்ள கார்டுக்கும் பரவக் கூடிய கார்டுக்கும் பல வித்தியாசம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கையில்  காண முடிகிறது. 



மேற்கொண்டு பரவக் கூடிய கார்டில் உள்ள நபரின் படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமெஜ் சர்ச் மூலம் தேடினோம். அப்படம் ஜானி பாய் (Johni_raja) என்கிற எக்ஸ் பக்கத்தில் கடந்த 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில், என் மண் என் மக்கள் யாத்திரைக்குத் தயாராகி ஆச்சு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்படகைத்தினைதான் தவறாக எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 



மேலும் அத்தேதிகளில் அவர் பாஜக நடத்தும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவரது எக்ஸ் பக்கத்திலும் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். 



இவற்றில் இருந்து நியூஸ் தமிழ்நாடு பெயரில் பரவக் கூடிய கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க : எடப்பாடியாராக மாறிய கிங் கோலி எனப் போலி நியூஸ் கார்டை பரப்பும் பாஜகவினர்

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம்.. திரித்து வெளியிட்ட தந்தி டிவி.. உண்மையான எண்ணிக்கை இதோ !

இதே ஜானி பாய் ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்பட்டு இருக்கின்றன. அவை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், கார் திருடனை பாஜக தனது கட்சியில் சேர்த்துக் கொண்டதாக நியூஸ் தமிழ்நாடு பெயரில் பரவக் கூடிய கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க