YouTurn

இஸ்லாமியப்பெண் என்பதால் பேருந்தில் ஏற்றாத நடத்துநர் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன? 

இஸ்லாமியப்பெண் என்பதால் பேருந்தில் ஏற்றாத நடத்துநர் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன? 

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவில், தனியார் பேருந்தின் நடத்துநர் தூத்துக்குடி என்றால் ஏறுங்கள், இடையில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள், பேருந்து கிளம்பும் போது ஏறிக்கொள்ளுங்கள் என்றே கூறுகிறார். இது பல தனியார் பேருந்துகளிலும் பின்பற்றக்கூடிய தவறான நடைமுறை. மேலும் வீடியோவில் ஒரு வயதான பெண்ணிடமும் நடத்துநர் இதையே கூறுகிறார். இந்நிலையில் இதை மதநோக்கில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இந்த சங்கீ பஸ் கண்டக்டர்  இஸ்லாமிய பெண்களை பஸ்ஸில் ஏறக்கூடாது என்று சொல்கிறார்  

#பெண்கள்_இடத்தில்_கடினமாக_நடந்த தனியார் பேருந்து நடத்துனர்.

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர், இஸ்லாமிய பெண் ஒருவரை பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

முதலில் பரவி வரும் வீடியோவை ஆய்வு செய்தோம். அதில் நடத்துனர் பேசுவது தெளிவாக பதிவாகியிருந்தது. அதில் தூத்துக்குடி என்றால் ஏறுங்கள், இடையில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள், பேருந்து கிளம்பும் போது ஏறிக்கொள்ளுங்கள் என்றே கூறுகிறார். மேலும் காயல்பட்டினம் ஏற முடியாத என்று கேட்க, பேருந்து கிளம்பும் போது தான் ஏற முடியும் என்றும், நாங்களும் டிக்கெட் எடுத்து தானே ஏறுகிறோம் என்று ஒரு பயணி கேட்க, அப்படி ஒன்றும் நீங்கள் பேருந்தில் ஏற வேண்டாம் எனவும் நடத்துனர் கூறுகிறார். மேலும் வீடியோவில் ஒரு வயதான பெண்ணிடமும் நடத்துநர் இதையே கூறுகிறார்.


இது பல தனியார் பேருந்துகளிலும் பின்பற்றக்கூடிய  தவறான நடைமுறையாகும். எந்த ஊருக்கு பேருந்து செல்கிறதோ, அந்த ஊருக்கு செல்பவர்களை மட்டும் முதலில் ஏற்றிக்கொண்டு, பின்பு பேருந்து கிளம்பும் போது மற்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் பல இடங்களில் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை மதநோக்கத்தில் தவறாக பரப்பி வருகின்றனர். 


முடிவு: 

நம் தேடலில், இஸ்லாமியப்பெண் என்பதால் பேருந்தில் ஏற்றாத நடத்துநர் எனப் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை. வீடியோவில், தனியார் பேருந்தின் நடத்துநர் தூத்துக்குடி என்றால் ஏறுங்கள், இடையில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள், பேருந்து கிளம்பும் போது ஏறிக்கொள்ளுங்கள் என்றே கூறுகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க