YouTurn

துபாய் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த ராமர் என எடிட் செய்யப்பட்ட படத்தை வெளியிட்ட தந்தி டிவி !

துபாய் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த ராமர் என எடிட் செய்யப்பட்ட படத்தை வெளியிட்ட தந்தி டிவி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் மின்னொளியில் ஒளிர்ந்த ராமர்..



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, நேற்று (ஜனவரி 22) நடைபெற்றது. இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக பல மாநிலங்களில் அரசு விடுமுறையும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் மின்னொளியில் ஒளிர்ந்த ராமர் என்று கூறி, புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்துடன் ராமர் காட்சியளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. இதனை தந்திடிவி உட்பட சமூக ஊடகங்களில் பலரும் தங்களது பக்கங்களில் பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.





உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து, burjkhalifa என்ற அவர்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யப்படும். ஆனால் நேற்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமரின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாக, இதில் எந்தவொரு பதிவுகளும் வெளியிடப்படவில்லை. மேலும் இதில் இறுதியாக கடந்த ஜனவரி 02 அன்று தான் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.



மேலும் தேடியதில், நடிகர் துல்கர் சல்மானின் (dqsalmaan) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021 நவம்பர் 05 அன்று, "குரூப் (Kurup) திரைப்படத்தின் ட்ரைலர் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் வருகின்ற நவம்பர் 10 அன்று காட்சிப்படுத்தப்படவுள்ளது. மலையாள திரையுலகில் இதுவே முதல்முறை. துபாயில் இருப்பவர்கள் இதை பாருங்கள்" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. பரவி வரும் புகைப்படமும், இந்த வீடியோவின் காட்சிகளும் ஒரே போன்று இருப்பதை காண முடிந்தது.



 










View this post on Instagram























 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)






எனவே குரூப் திரைப்படம் குறித்து வெளியிடப்பட்ட வீடியோவின் காட்சிகளை சிலர் ராமர் நிற்பது போன்று எடிட் செய்து, தவறாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. இதனை உண்மையான புகைப்படம் என்று கருதி தந்தி டிவியும் தனது சமூக ஊடகப் பக்கங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளது.



மேலும் படிக்க: ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வதந்திகள் மூலமாக அரசியல் செய்யும் தலைவர்கள் !

முடிவு:

நம் தேடலில், துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒளிர்ந்த ராமர் என தந்தி டிவி உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வரும் புகைப்படம் உண்மையானது அல்ல என்பதையும், இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க