YouTurn

காங்கிரஸ் கொடியுடன் சென்றவர்களை எருமை மாடு முட்டியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

காங்கிரஸ் கொடியுடன் சென்றவர்களை எருமை மாடு முட்டியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

காங்கிரஸ் கொடியை கண்டாலே எருமை மாடுகளுக்கு கூட பிடிக்கல, மனிதர்களுக்கு எப்படி பிடிக்கும்

X link

விரிவான விளக்கம்

கையில் காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் சென்றவர்களை எருமை மாடு துரத்தி முட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன ?

பரவக் கூடிய வீடியோவை பார்க்கும் போதே அதில் காங்கிரஸ் கட்சிக் கொடி இருப்பது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. வீடியோவில் இருக்க கூடிய கொடிகள் அனைத்தும் ஒரே நிலையில் உள்ளது. மேலும் கொடிகள் யாருடைய கையிலும் இல்லாமல் தனியாக அந்தரத்தில் மிதந்து கொண்டுள்ளது. 



‘காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு கேட்கச் சென்றனர்’ என இந்தியில் எழுதப்பட்டுப் பரப்பப்படும் இதே வீடியோ 2022, பிப்ரவரி மாதம் முதற்கொண்டு இணையத்தில் பரவியுள்ளது. 



இந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில் 2022, ஜனவரி மாதம் ஒரு யூடியூப் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சிக் கொடியோ, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு கேட்கச் சென்றனர் என்றோ எதுவும் இல்லை. இவற்றில் இருந்து காங்கிரஸ் கொடி இருப்பது போன்று போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 



முடிவு : 

காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் ஓட்டு கேட்கச் சென்றவர்களை எருமை மாடுகள் விரட்டி முட்டியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. வீடியோவில் காங்கிரஸ் கொடி இருப்பது போன்று போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…